நாங்கன்னா அவ்வளவு எழக்காரமா? - திமுக கூட்டணிக்குள் புகைச்சல்... விசிக எதிர்ப்பிற்கு அடிபணிந்த ஆளும் கட்சி...!
திருக்கோவில்லூர் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழாவில் வெடித்த சர்ச்சை திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 22 கோடி ரூபா மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார்.
இதற்கு முன்னதாக விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதனை கவனித்த விடுதலை சிறுத்தை கட்சியினர், பேனரில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இருப்பதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமாரின் புகைப்படம் இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
மேடையில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, நகராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் புகைப்படம் இடம் பெறாது கண்டு விசிகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக திமுகவினர் உருவப்படங்கள் இருந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டு, ரவிக்குமார் போட்டோவுடன் கூடிய பேனர் மாற்றப்பட்டது. இதனால் சலசலப்பு குறைந்து, பேருந்து நிலைய திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
திமுக கூட்டணியில் வெறும் 2 சீட்டிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒட்டிக்கொண்டிருப்பதாகவும், ஊருக்கே சமூக நீதி போதிக்கும் திமுக கூட்டணி கட்சி விவகாரத்தில் விசிகவை குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து திருமாவளவன் வாய் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதனால் தான் இவ்வளவு நாட்களாக பொறுத்து, பொறுத்து பார்த்து வந்த விசிகவினர் திமுகவிற்கு எதிராக பொங்கியெழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ் மீட்