“போராட்டம் வெடிக்கும்” ... தவெக அரசை எச்சரித்த வீரபாண்டியன்... அதே மேடையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த்...!
கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அம்புமேடு என்ற இடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிலாளர் சங்கத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசும் போது, தூய்மை பணியாளர்கள் வாழ்வின் கடைக்கோடியில் இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை மிக மிக நியாயமான கோரிக்கைகள். அரசு அதிகாரிகள் பக்கத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளிகள் பக்கத்தில் இருந்து சிந்திக்கிற ஆட்சியாளர்கள் என்பது வேறு. உழைக்கிற, சிந்திக்கிற, உயிரை பணயம் வைக்கின்ற தொழிலாளர்கள் அருகில் இருந்து நடைபெறுகிற ஆட்சி என்பது வேறு. நாங்கள் இந்த ஏழைகளுக்கு அருகில் இருந்து ஆட்சி நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். உங்கள் கோரிக்கைகள் வெல்லும், ஒருவேலை உங்களது கோரிக்கைகள் கடந்து சென்றால் ஏ ஐ டி யு சி யும், கம்யூனிஸ்ட் பேரியக்கமும் உங்களுக்காக தொடர்ந்து போராடும், கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்யும். என்றார்.
பின்னர் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது: ஏழை மக்கள் மீது எப்போதும் பரிவு காட்டும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. நாங்கள் கொடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சியை போராடும் என்று மாநில செயலாளர் கூறினார். அப்படி ஒரு கட்சியாக தவெக இருக்காது.
இதையும் படிங்க: டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!
கம்யூனிஸ்ட் கட்சி என்றால் அடிக்கு அடிக்கு போராட்டம் நடத்திக்கீனே இருந்தாங்கன்னுதான் சொல்வாங்க. இனிவரும் காலங்களில் என்ன கம்யூனிஸ்ட் கட்சி போராட்டமே நடத்த மாட்டாங்க என்ற நிலைமையை தான் கண்டிப்பாக நாங்கள் கொண்டு வருவோம். உங்களுடைய குறைகள் நிறையவே இருக்கிறது. அதை நாங்கள் இல்லை என்று செல்லவில்லை. மிக விரைவில் உங்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல பதிலை தமிழக முதல்வர் அறிவிப்பார்கள். உங்கள் எல்லாருக்கும் மிக விரைவில் நல்லது நடக்கும் என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூய்மை பணியாளர்கள் தங்களின் நிலையை சொல்லும் போதே கஷ்டமாக இருந்தது. உங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் கூறி பரிசீலனை செய்வோம் முதல்வர் உங்களை கண்டிப்பாக கைவிட மாட்டார் உங்களுக்கு என்ன தேவையோ அதனௌ முதல்வர் செய்வார்.
இப்போதெல்லாம் ஒரு அரசாணை வெளியிட வேண்டும் என்றால் முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டு முழுவதுமாக தெரிந்து கொண்டு செயல்படுத்த முடியுமா என்ற பின்னரே அரசாணை வெளியிடுகிறார். ஏழை மக்களுக்கு துணையாக இருக்கும் கட்சி கம்யூனிஸ்ட் என்றால் ஏழை மக்களுக்கு துணையாக மட்டும் இல்லை செய்து தரும் கட்சியாக இருக்கும் கட்சி தான் தவெக என்றார்.
இதையும் படிங்க: "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!