×
 

“சட்டையைக் கழட்டிடுவேன்... நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம்”... காட்பாடி டிஎஸ்பியை பகிரங்கமாக எச்சரித்த வேல்முருகன்...!

காட்பாடி டிஎஸ்பிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகிரங்க சவால் விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி டிஎஸ்பி ஒருவர் எங்கள் கட்சிக்காரர்கள் பொது வேலையாக வந்தால் அவ மதிக்கிறார். தயவுகூர்ந்து கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் டிஎஸ்பி அவர்களே சட்டையை கழற்றி விடுவேன் என மேடையில் வேல்முருகன் பகிரங்கமாக எச்சரித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை தேரடி வீதியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், நாங்கள் வேற மாதிரி ஆட்கள். நாங்கள் காணாமல் போபவர்கள் அல்ல காணாமல் போகவைப்பவர்கள். அதற்கு முன் என்னோட வேலையும் காணாமல் போக வைப்பது தான். பொது மக்கள் மீது யார் கைத்தாலும் அவனுக்கு எங்கள் முந்திரி காட்டில் தூக்கு தண்டனை தான்.

காட்பாடியில் உள்ள DSP ஒருவர் எங்கள் கட்சி நிர்வாகிகள் பொது வேலைக்காக காவல் நிலையம் சென்றால் அவமதிக்கிறார். அவர்கள் சொந்த வேலைக்காக வரவில்லை பொது வேலைக்காக வருகிறார்கள் அவருக்கு உரிய மரியாதை கொடுங்கள். தயவு கூர்ந்து கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் DSP அவர்களே காவல் நிலையம் வருபவர்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் இல்லை என்றால் சட்டையை கழற்றி விடுவேன். பல எஸ்.பி.க்களை டிரான்ஸ்பர் செய்தவன் நான். பாமகவையே இடதுகை சுண்டு விரலால் டீல் பண்ணியவன் இந்த வேல்முருகன் நீங்கெல்லாம் எம்மாத்திரம்  என பேசினார்.

இதையும் படிங்க: “மதவெறி அரசியலுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்” - பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த திருமா...!

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அவர் கூறுகையில்,  SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்களை நீக்கி உள்ளார்கள். இறந்தவர்களை நீக்கி இருக்கலாம் அதை ஏற்கிறேன். முகவரி அல்ல என நீக்குவதை ஜனதாயக கடமையை பறித்ததாக கருதுகிறேன். ஒன்றிய அரசு தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு நயவஞ்சகத்தோடு சில வேலைகளை செய்கிறது என குற்றம் சாட்டுகிறேன். வெளிமாநில மக்களை இங்கே இறக்குமதி செய்து குடும்ப அட்டை வழங்கி வாக்காளர் உரிமை கொடுப்பதை எதிர்க்கிறேன்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்கள் வாதிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை தமிழக முதல்வருக்கு நான் வலியுறுத்துகிறேன். ஒன்றிய அரசு பணியில் தமிழகத்தில் 90% பணியை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இதை தமிழக முதல்வர் தட்டிக் கேட்க வேண்டும். ஒன்றிய அரசு பணியில் தமிழகத்தில் வெளி மாநிலதத்தவர்களை திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் ஒரு சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் செயல்படுகிறார்கள் இதனை தடுத்து முதல்வர் அவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இங்கு சாதி, மதத்தின் பெயரால் பிளவு படுத்த முடியாது. தமிழ்நாடு வள்ளலார் போன்றோர்களால் பண்பட்டு மண்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அந்நிய தேசம் நம் நாட்டு தலைவர்களை போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க தமிழர், தமிழர் நிலத்தை மருதலிக்கும் ஒன்றிய அரசை நான்  கண்டிக்கிறேன். தமிழ்நாடு என்றாலே இழுப்பங்காயாக கசக்கிறது மத்திய அரசிற்கு.ஈரோடு மாநாட்டில் திமுக தீய சக்தி என பேசிய விஜயை நான் குறை சொல்ல மாட்டேன் நமது மக்கள் தான் மாற வேண்டும். மிக மோசமான இழிநிலையில் இருக்கின்ற ரசிகர் என்ற பெயரால் செத்து மடிகிற கூட்டம் திருத்தப்பட வேண்டும்.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை, கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக முதல்வர் நிறைவேற்ற வேண்டும். தங்கள் கட்சியில் உள்ளவர்கள் இப்போதே, தேர்தலில் எங்களுக்கு பத்து சீட்டு வேண்டும் 15 சீட்டு வேண்டும் என பேசப்படுவது குறித்து கேட்டதற்கு, எங்க கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஆறு சீட்டு வேண்டும், 10 சீட்டு வேண்டும், 8 சீட்டு வேண்டும் என கேட்பது அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. தேர்தல் நேரத்தில் நாங்கள் உரிய எண்ணிக்கையில் இடத்தை கேட்போம். பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையில், உடன்பாடு ஏற்பட்டு ஒதுக்கும் இடத்தில் போட்டியிடுவோம். உடன்பாடு ஏற்படாவிட்டால் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து எனது முடிவை அறிவிப்பேன் என கூறினார்.
 

இதையும் படிங்க: இந்தியா ஒரு இந்து நாடு... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் மீண்டும் வெடித்தது சர்ச்சை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share