×
 
☰

வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மக்கள் வாழ்வதா அல்லது நாண்டுகிட்டு சாவதா என்றும், நடப்பது நல்லாட்சியா அல்லது நடிப்புடன் கூடிய நாடக ஆட்சியா என்றும் கேள்வி எழுப்பி மக்களிடம் பதில் கேட்டார்.அரிசி, காய்கறிகள், பழங்கள், பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களை வாட்டி வதைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மே மாதத்தில் ரூ.50-க்கு வாங்கிய அரிசி இன்று ரூ.94-க்கு விற்கப்படுவதாக மக்கள் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே பொருளின் விலை இவ்வளவு வேகமாக உயர்ந்தால் குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தும் மக்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.மின்கட்டணச் சுமையும் மக்களை அழுத்துவதாக அவர் தெரிவித்தார். மின்கட்டணம் உயர்வதற்கான காரணம் என்ன, அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது, மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்ற கேள்விகளுக்கு அரசு வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களும் ஊடகங்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும், அமைச்சர்கள் ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கூறி தப்பித்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான மீட்டர் கட்டணக் கோரிக்கையிலும் அரசு தொடர்ந்து காலம் கடத்துவதாக அவர் கூறினார். எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, உதிரிபாகங்களின் விலை ஆகியவை உயர்ந்துள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு, இதோ செய்கிறோம், அதோ செய்கிறோம் என்று நாடகம் ஆடுவதாக அவர் சாடினார்.வெறும் வாக்குறுதிகளால் மக்கள் குடும்பம் நடத்த முடியாது என வலியுறுத்திய வேல்முருகன், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும், மின்சாரச் செலவைக் குறைப்பதிலும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும் அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

தமிழ்நாடு அரசு இனியும் காரணங்களைக் கூறாமல், விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன, மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைக்கப் போவது எப்படி, ஆட்டோ ஓட்டுநர்களின் மீட்டர் கட்டணக் கோரிக்கையை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதற்கு தெளிவான காலக்கெடுவுடன் பதில் அளிக்க வேண்டும் என அவர் கோரினார்.மக்கள் வாழ்வதற்காக வாக்களித்தார்கள். விலைவாசி உயர்வைச் சுமந்து சாவதற்காக அல்ல என்பதை முதலமைச்சரும் அமைச்சர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share