×
 

மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், கட்சியின் உள்ளாட்சி மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்த அதிருப்தி வெளிப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான குரல்கள் வலுத்தன. இந்தச் சூழலில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் ஒரு அணி உருவானது. இந்தப் பிரிவினை அதிமுகவை இரு அணிகளாகப் பிளந்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்தப் பிரிவு அதிரடியாகச் செயல்பட்டது. இபிஎஸ் தரப்பின் கொறடா உத்தரவை மீறி, சண்முகம்-வேலுமணி அணியைச் சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கட்சியில் பதவி பறிப்பு, தகுதி நீக்க மனுக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து ராஜினாமா செய்தனர். இந்தச் சம்பவங்கள் அதிமுகவின் உள்ளகப் பிரச்னையை பொதுவெளியில் கொண்டு வந்தன.

பின்னர் இரு அணிகளும் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரிய கடிதத்தை அளித்தன. முன்பு இரு தரப்பும் அளித்த புகார் மனுக்கள், தகுதி நீக்கக் கோரிக்கைகள், கொறடா தொடர்பான மனுக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றனர். மன்னிப்புக் கடிதங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. கட்சியின் எம்எல்ஏ எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இணைப்பு நிகழ்வில் சி.வி. சண்முகம் முக்கியப் பங்கு வகிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இதையும் படிங்க: "எங்களுக்குள் பிளவு இல்லை"..! அதிமுகவில் ஒற்றுமை தான்... S.P. வேலுமணி உறுதி..!

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என எப்போதுமே கூறி வருகிறோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக தங்கள் உயிர் மூச்சு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். சட்டமன்றத் தேர்தல் தோல்வி பற்றி ஆராய்ந்து கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். பதவிக்காக தமிழக வெற்றி கழகத்தை ஆதரிக்கவில்லை என்றும் திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஆதரவு அளித்தோம் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கொடுத்த மனுக்களை சரி பார்த்துக் கொடுத்ததே சி.வி. சண்முகம் தான் என்று கூறினார். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று கூறிய அவர் தங்கள் கருத்து தான் சி.வி. சண்முகத்தின் கருத்து எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைத்து முடிவுகளும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் ஆலோசித்து தான் எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! ஆட்டம் காணும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share