தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடம் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான 30 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்ரு அறிவித்த விஜய், தொடர்ந்து இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து 30 தொகுதிகளுக்கும் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் த.வெ.க. தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரு பகுதிகளிலும் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரியின் முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டனர்:
லாஸ்பேட்டை - சாமிநாதன்
காரைக்கால் தெற்கு - அசனா
நெட்டப்பாக்கம் (தனி) - பெரியசாமி
திருபுவனை (தனி) - சாய் சரவணன் குமார்
முத்தியால்பேட்டை - பிரகாஷ் குமார்
இதையும் படிங்க: வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!
பாகூர் - தனவேலு, ராஜ் பவன் - சந்திரன், உப்பளம் - சிவா, உழவர்கரை - சசிபாலன், அரியாங்குப்பம் - குமரவேலு, மணவெளி - ராமு, வில்லியனூர் - ரமேஷ், முதலியார்பேட்டை - மணிபாலன், மண்ணாடிப்பட்டு - பாரதிதாசன், உருளையன்பேட்டை - ஜி.நேரு குப்புசாமி, மங்கலம் - சத்யா, காமராஜ் நகர் - சுமன், நெல்லித்தோப்பு - விக்னேஸ்வரன், காலாப்பட்டு - சசிக்குமார், இந்திரா நகர் - முருகன், கதிர்காமம் - ஜெயந்தி, ஊசுடு (தனி) - சரவணபவா, தட்டாஞ்சாவடி - விநாயகம், ஏம்பலம் (தனி) - தமிழ்ச்செல்வன், நெடுங்காடு (தனி) - காமராஜ், திருநள்ளாறு - ராஜா முஹம்மது, காரைக்கால் வடக்கு - வெங்கடேஷ், நிரவி T.R. பட்டினம் - கணேஷ், மாகே - பிரிஜேஷ், ஏனாம் - தோட்டாராஜூ.
இந்த அறிவிப்புடன் த.வெ.க. புதுச்சேரியிலும் முழு வீச்சில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. விஜய் தமிழகத்தில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், புதுச்சேரியிலும் தனது கட்சியின் வலிமையை நிரூபிக்கும் வகையில் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை (மார்ச் 30) ஒரே நாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனால் நாளை புதுச்சேரி முழுவதும் த.வெ.க.வின் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!