×
 

அடேங்கப்பா...!! இது நம்ப லிஸ்டுலேயே இல்லையே... செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த முக்கிய டாஸ்க்... திமுக, அதிமுக செம்ம ஷாக்...!

இரண்டு முக்கிய பொறுப்புகளையும் கடந்து செங்கோட்டையனுக்கு விஜய் ஒரு முக்கிய அசைன்மெண்ட்டை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதற்கு ஏற்ப, சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம், கையில் குத்தப்பட்ட அதிமுக கொடியின் பச்சை மற்றும் அதிமுக கொடி கட்டிய காரில் சென்று கனத்த மனதுடன் தனது பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். 

அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் செங்கோட்டையன், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி என புகழப்பட்டவர். மேலும் ஜெயலலிதாவின் குட்புக்கிலும் தனி இடம்பிடித்தவர். அப்படிப்பட்டவர் அதிமுகவை உதறித்தள்ளிவிட்டு, தவெகவில் இணைவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையில் தான், நேற்று பட்டினம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன் 2 கட்டங்களாக தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

முதற்கட்டமாக விஜய், செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆலோசனையில், விஜய், செங்கோட்டையனுடன், தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மட்டும் இருந்துள்ளார். இந்த இரண்டு ஆலோசனைகளும் தலா ஒரு மணி நேரம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: விஜய் தலைமையேற்ற எம்.ஜி.ஆர் விசுவாசி... தவெக-காரரான செங்கோட்டையன்...!

முதற்கட்ட ஆலோசனையின் போது, தவெகவில் விஜய்க்கு அடுத்தப்படியாக செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய்க்கு நிகரான அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன. அதாவது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் செங்கோட்டையன் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவுகளை, அவரே நேரடியாக விஜய்க்கு தெரிவிப்பார். அதில் சிறந்த முடிவை விஜய் தேர்வு செய்வார் எனக்கூறப்படுகிறது. 

சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் 28 பேர் கொண்ட நிர்வாக குழு ஒன்றை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விஜய் அமைத்திருந்தார். அந்த 28 பேர் கொண்ட நிர்வாக குழு செங்கோட்டையனுடைய கட்டுப்பாட்டில் இயக்கும் எனக்கூறப்படுகிறது. 

மேலும் விஜயின் சுற்றுப்பயண திட்டங்களையும் இனி செங்கோட்டையன் தான் வடிவமைப்பார் எனக்கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கிட்டத்தட்ட 2 மாதத்திற்கு கப்சிப் என இருந்த தவெக இப்போது மீண்டும் கள அரசியலில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது 2வது கட்டமாக விஜய் தனது சுற்றுப்பயணங்களை தொடங்கியிருக்கக்கூடிய சமயத்தில், அவர் எங்கிருந்து பயணத்தை தொடங்க வேண்டும், எப்படி அனுமதி பெற வேண்டும், எப்படி மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய பணிகளை இனி செங்கோட்டையன் தான் மேற்கொள்ள உள்ளார். 

இந்த இரண்டு முக்கிய பொறுப்புகளையும் கடந்து செங்கோட்டையனுக்கு விஜய் ஒரு முக்கிய அசைன்மெண்ட்டை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்த வேண்டும், வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கொங்கு மண்டலத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளாராம். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்க திமுக படாதபாடு பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டல பொறுப்பாளராக நியமித்து கொஞ்சம், கொஞ்சமாக காய் நகர்த்தி கொங்கு மண்டலத்தில் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. 

அதற்கு “குறுக்கே இந்த கெளசிக் வந்தால்” என்பது போல் செங்கோட்டையனை வைத்து திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் கொங்குவில் இருந்து காலி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அரசியலில் தலைகீழ் திருப்பம்... TVK- வில் செங்கோட்டையன்? பனையூர் வந்த தவெக தலைவர் விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share