தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!
விஜய் ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும், இதனால் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத நிலையும் நீடித்து வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது பெரும்பான்மையின் நிரூபித்த பின்னரே பதவி ஏற்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமனறத தேரதலில தமிழக வெற்றி கழகம் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது என்று தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் CM ஆகிட்டா ஹெலிகாப்டர் கன்ஃபார்ம்!! பனையூர் - தலைமை செயலகம்! ஹெலிபேட் அமைக்க ஆலோசனை!
இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருவதாகவும் இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பாகவும் தெரிவித்துள்ளது.
மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் தலைமையில்தான் ஆட்சி! அது உறுதி! காங்கிரசில் அமைச்சர் பதவி யாருக்கு?!