தவெகவில் இணைகிறார் செம்மலை? முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரசாரத்தில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம்?!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைய உள்ளதாகவும், தாராபுரம் பொதுக்கூட்டத்தில் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் பொதுக்கூட்டத்துக்காக சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவலின்படி, QR குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு உள்ள 5,000 பேருக்கு மட்டுமே நேரடி அனுமதி வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சராகிறார் சவுமியா அன்புமணி! முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல்! தவெக அமைச்சரவையில் பாமக என்ட்ரி?
விஜய்யின் வருகையையொட்டி தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட திடல் மற்றும் விஜய் செல்லும் வழித்தடங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாராபுரம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைய உள்ளதாகவும், தாராபுரம் பொதுக்கூட்டத்தில் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
செம்மலை ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் இன்று தவெகவில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால், விஜய்யின் இன்றைய தாராபுரம் பிரசார கூட்டம் தேர்தல் பிரசாரத்துடன் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. கூட்டத்தில் விஜய் பேச உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் செம்மலை தொடர்பான தகவல்களுக்கு இன்று தெளிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்டுச்சோற்றில் பெருச்சாளிகள் கம்யூனிஸ்டுகள்!! விஜய் எச்சரிக்கையாக இருக்கணும்!! எச்.ராஜா வார்னிங்!