கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!
திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்ற விஜய் விமர்சனம் செய்தார்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்களை கூறுகிறார்கள் என்றும் சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு குறித்து தான் பேசுவதால் முதலமைச்சருக்கு சங்கடம் என்றும் திமுகவை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் எனவும் விஜய் காட்டமாக தெரிவித்தார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் அமைதியாக இருந்தாலே ஒரு பிரச்சனையும் வராது என்று தெரிவித்தார்.
மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றப்படும் என்று கூறினீர்களே செய்தீர்களா என்று கேட்டார். மாடல் கரப்ஷன் என்று தெரிவித்தார். தங்கள் பேருந்து விடாத கிராமமே இல்லை என்று கூறுவார்கள் என்றும் எங்கள் ஊருக்கு ஒரு மினி பேருந்தையாவது விடுங்கள் என்று ஒரு பெண் கேட்டதை சுட்டிக்காட்டினார். திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்தார்.
இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் என்மேல ஏன் பழியை தூக்கி போட்டீங்க? முதல்வரை கேள்விகளால் துளைத்த விஜய்..!!
சொத்து விவரத்தை வெளியிட தயாரா என்று கேள்வி எழுப்பினார். அண்ணா அறிவாலயம் பக்கமாக நிழலுக்கு ஒதுங்கினால் கூட திமுகவினர் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுகிறார்கள் என்றும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்றும் பெயர் சூட்டினார் விஜய். முதலமைச்சர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாந்த நிலையில் தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் ஒரு தலைமை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இது விஜய்க்கும் ஸ்டாலினுக்குமான போர்.!! காதை கிழித்த விசில் சத்தம்… விஜய் ஃபயர் ஸ்பீச்..!!