25 ஆண்டுகால திராவிட கட்சிகளின் முறைகேடு! முதல்வர் விஜய் அதிரடி! சூரிய மின் உற்பத்திக்கு இனி பி.எப் கிடையாது!
கட்டட அனுமதியை தொடர்ந்து, சூரிய மின் உற்பத்தி திட்டத்திலும், முறைகேடான பி.எப்., வசூலை முற்றிலுமாக ஒழித்துள்ளது விஜய் அரசு.
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, கட்டட அனுமதிக்குப் பிறகு சூரிய மின் உற்பத்தி திட்டங்களிலும் ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் நடைபெற்ற முறைகேடான பண வசூலை முழுமையாக ஒழித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையை தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். இதேபோன்ற நேர்மையான நடவடிக்கைகளை மற்ற துறைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆட்சியில் தமிழக அரசுத் துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழல் பரவலாக இருந்தது. கட்டட அனுமதி, மின் இணைப்பு, சூரிய மின் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி பெற ‘பார்ட்டி பண்ட்’ பெயரில் பணம் பறிக்கப்பட்டது ஊரறிந்த உண்மை. தி.மு.க. ஆட்சியில் சி.எம்.டி.ஏ. மற்றும் டி.டி.சி.பி.யில் சதுர அடிக்கு 27 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு இந்த வசூல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்பாடும் தமிழ் பாட புத்தகங்கள்! மாற்றம் கொண்டு வருமா விஜயின் தவெக அரசு?!
இதைத் தொடர்ந்து சூரிய மின் உற்பத்தி துறையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2006-2011 தி.மு.க. ஆட்சியில் ஒரு மெகாவாட்டுக்கு 5 லட்சம் ரூபாயாக இருந்த ‘கட்சி நிதி’ வசூல், அ.தி.மு.க. ஆட்சியில் 10 லட்சமாகவும், பின்னர் 15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. கடைசியாக தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி பதவியில் இருந்தபோது 25 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. 10 மெகாவாட் திட்டத்துக்கு 2.5 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இந்த 25 ஆண்டுகால ஊழல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் உடனடியாக அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ‘பார்ட்டி பண்ட்’ இல்லாமல் அனுமதி வழங்கும் புதிய முறை தொழிலதிபர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொழில் துறையினர் கூறுகையில், “இந்த அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் தொழில் செய்வதை எளிதாக்கும். இதேபோன்ற நேர்மையான அணுகுமுறையை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தினால், தமிழகம் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக மாறும்” என்றனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, ஊழலை ஒழித்து வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!