×
 

தவெக அரசியல் அவ்வளவுதானா!? கட்சியை கலைக்க விஜய் முடிவு? நிர்வாகிகள் கண்ணீர்!

தமிழக வெற்றிக் கழகத்தை மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, கரூரில் இருந்து ஆறுதல் பெற வந்த மக்களிடம், விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பலியான சோக சம்பவத்துக்குப் பின், முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். "கட்சியைத் தொடர்ந்து நடத்தலாமா? அல்லது மீண்டும் மக்கள் இயக்கமாக மாற்றிவிடலாமா?" என அவர்களிடமே ஆலோசனை கேட்டு அதிர்ச்சி அளித்தார்.

கடந்த மாதம் கரூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விஜய், உடனடியாக வீடு திரும்பி தனிமையில் இருந்தார். கரூர் சென்று பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க ஐகோர்ட்டில் அனுமதி கோரியும், காவல்துறை அனுமதி தர அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு வரவழைத்து, நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று பகல் வரை நேரில் சந்தித்தார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 நிமிடங்கள் ஒதுக்கி, தானே காபி-பிஸ்கெட் பரிமாறினார். "கரூர் வர முடியாமல் போனதற்கு மன்னியுங்கள். உங்கள் வலியை என் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன். கல்வி, வேலை, மருத்துவம் என எல்லா உதவிகளும் கடைசி வரை செய்வேன்" என உறுதியளித்தார். பலமுறை கண்களில் நீர் துளித்தது.

இதையும் படிங்க: முதன்முறையாக... குடியரசு துணைத் தலைவராக தமிழகம் வந்த C.P. ராதாகிருஷ்ணன்..! உற்சாக வரவேற்பு...!

ஆனால் அதிர்ச்சி தரும் தகவல்: "நான் கடுமையான நெருக்கடியில் கட்சியை நடத்துகிறேன். அதனாலேயே 41 உயிர்கள் பறிபோனது. இந்த வலியோடு கட்சியை வலிமையாக நடத்த முடியுமா? சூழல் அமையுமா? கட்சியைத் தொடரலாமா? அல்லது மீண்டும் மக்கள் இயக்கமாக மாற்றிவிடலாமா?" என பல குடும்பத்தினரிடம் விஜய் கேட்டார். இதைக் கேட்டு பலரும் பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர்.

கட்சியின் மாநில நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் "கட்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும்" என விஜயிடம் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சி முடிந்து அனைவருடனும் மதிய உணவு உண்டார். ஆனால், எப்போதும் விஜயுடன் ஒட்டியிருக்கும் பொதுச்செயலாளர் ஆனந்த் இந்நிகழ்ச்சிக்கு வராதது கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் இந்தக் கேள்வி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியைக் கலைக்கும் முடிவில் இருப்பதாகவே பலர் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை கொல்ல நடந்த சதி!! சீனாவில் ஸ்கெட்ச்! அமெரிக்க திட்டத்தை தவிடு பொடியாக்கிய புடின்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share