விஜய் கொடுத்த மாஸ்டர் ஸ்ட்ரோக்! எடப்பாடியின் கனவு கலைந்தது! செங்கோட்டையன் ஒரே நாளில் EPS-க்கு செக்மேட்!
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் மூலம் விஜய் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய செக் வைத்துள்ளார்.
நடிகர் விஜய் ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) மிகப்பெரிய செக் வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக “தவெகவுடன் கூட்டணி… விஜய் எங்களோடு தான் வருவார்” என்று பகிரங்கமாகவே பேசி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று காலை பனையூரில் நடந்த ஒரே நிகழ்வு போதுமானது – அவரது கனவு தூள் தூளாக உடைந்தது!
கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பேசினால் போதும், “விஜய் எங்களோடு தான்… தவெக கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாச்சு ஸ்டாலின்!” என்று சிரிச்சு சிரிச்சுப் பேசினார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சட்டசபையிலேயே விஜய்க்காக குரல் கொடுத்தார். “விஜய்யை குறை சொல்வது திமுகவின் சதி” நின்று நிதானமாக ஆதரவு தந்தார். கள்ளக்குறிச்சி சாராய மரணங்களில் கூட திமுகவை வெளுத்து வாங்கி இருந்தார்.
குமாரபாளையம் மேடையில் தவெக கொடி ஏற்றியவர்களைப் பார்த்து “பிள்ளையார் சுழி போட்டாச்சு! இந்த ஆரவாரம் ஸ்டாலின் செவியைத் துளைக்கும்” என்று கைதட்டி ரசித்தார். தொலைபேசியில் விஜய்யை நேரடியாகப் பிடித்து “கூட்டணிக்கு வாங்கப்பா” என்று கேட்டதாகவே செய்திகள் வந்தன.
இதையும் படிங்க: அதிக தொகுதி! அமைச்சரவையில் இடம்!! மீண்டும் அடம்பிடிக்கும் காங்., தீராத தலைவலியில் திமுக!
ஆனால் இன்று காலை என்ன நடந்தது தெரியுமா? செங்கோட்டையன்… அதிமுகவின் கொங்கு கோட்டையாக இருந்த செங்கோட்டையன்… 50 வருஷம் ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருந்த செங்கோட்டையன்… எடப்பாடியால் வெளியேற்றப்பட்ட ஒரு வாரத்தில் தவெகவில் சேர்ந்துவிட்டார்! அது மட்டுமல்ல, விஜய் அவரை உடனடியாக கொங்கு மண்டல அமைப்புச் செயலாளராக நியமித்துவிட்டார். அதாவது தவெகவுக்குள் செங்கோட்டையனுக்கு இப்போது பிரம்மாண்ட அதிகாரம்!
இனி என்ன நடக்கும்? ஒருவேளை அதிமுக-தவெக கூட்டணி பேச்சு வந்தாலும் உள்ளிருந்து செங்கோட்டையன் ஒற்றை ஆளாக முட்டுக்கட்டை போட முடியும். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவே மாட்டார். NDA கூட்டணியில் “நான் தான் முதல்வர்” என்று எடப்பாடி கனவு கண்டால், அதற்கும் தவெகவுக்குள்ளிருந்து செங்கோட்டையன் பிரேக் அடிக்க முடியும். அரசியல் வட்டாரத்தில் இப்போது ஒரே பேச்சு: “விஜய் ஒரே நாளில் எடப்பாடிக்கு செக்மேட் வைத்துவிட்டார்!”
இதுவரை சிரித்துக்கொண்டு வந்த எடப்பாடிக்கு இப்போது முகம் இருண்டு போயிருக்கிறது. கொங்கு வாக்கு வங்கியை ஒரே அடியில் தவெக பக்கம் இழுத்துவிட்டார் விஜய். இனி 2026-ல் அதிமுகவுக்கு எதிராகவே தவெக பெரும் சவாலாக மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். விஜய் கொடுத்த இந்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்… தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே மறக்க முடியாத திருப்பமாக மாறிப்போச்சு!
இதையும் படிங்க: 8 முறை எம்.எல்.ஏ!! ‘52 ஆண்டு வெற்றியாளர்’ செங்கோட்டையன் கடந்து வந்த பாதை!!