×
 

“தெனாவெட்டு பேச்சு... மொத்தமும் போச்சு”... பேரதிர்ச்சியில் விஜய்... கண்ணீர் கடலில் தத்தளிக்கும் தவெக...!

தனது முதல் மாநாட்டின் போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறி விஜய் கூட்டணிக்காக வலைவீசிய போதும் எந்த கட்சியும் அந்த வலையில் சிக்கவில்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் திண்டாடி வருகிறது. தங்களது ஒற்றை நம்பிக்கையான புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியும் கைவிரித்தது தமிழக வெற்றிக் கழகத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பழைய கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. ஒருபக்கம் திமுக தனது பழைய கூட்டணி கட்சிகளைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மற்றொருபுறம் அதிமுக + பாஜக கூட்டணி அமைத்துள்ளதோடு, பாமக, தேமுதிக போன்ற தனது பழைய கூட்டாளிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்து வருகிறது. இதனால் புதிய கட்சியாக தவெக கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகிறது.

தனது முதல் மாநாட்டின் போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறி விஜய் கூட்டணிக்காக வலைவீசிய போதும் எந்த கட்சியும் அந்த வலையில் சிக்கவில்லை. தவெகவின் சூட்சமத்தை புரிந்துக்கொண்ட திமுக தனது பழைய கூட்டணியை தன் பக்கமே தக்கவைத்துக்கொண்டது. முதலில் விசிகவிற்கு வலைவீசிய விஜய்க்கு திருமாவளவன் ஓரளவுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பது போல் தெரிந்தாலும், நடுவில் திமுக கூட்டணியிலேயே தொடருவதாக முடிவெடுத்தார். அடுத்ததாக காங்கிரஸில் தனக்கு உள்ள டெல்லி லாபியைப் பயன்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வரமுயன்றார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனியாக குழுவையே அமைத்து ஷாக் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. 

இதையும் படிங்க: விஜய் UNCLE ஆ… காட்டுங்க..! ஆசையாக விஜய்க்கு கேக் ஊட்டி மகிழ்ந்த குழந்தைகள்… களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா…!

ஆளும் கட்சியின் கூட்டணியை உடைக்க முடியாமல் போனதால் விரக்தி அடைந்த விஜய், அதிமுக + பாஜக கூட்டணிக்கு போவோமா? வேண்டாமா? என நிலைப்பாட்டில் அலைமோதிக்கொண்டிருக்கும் தேமுதிக, பாஜக கூட்டணியை வளைக்க பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் வர உள்ள தேர்தல் இரண்டு கட்சிகளுக்குமே வாழ்வா? சாவா? போராட்டம் என்பதால் புதிய கட்சிகளை நம்பி கூட்டணி வைக்க தயாராக இல்லை எனக்கூறப்படுகிறது. 

செங்கோட்டையன் வருகையை அடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே.சசிகலாவை தவெகவுடன் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டன. ஆனால் அதற்கும் ஒருபுறம் பாஜக முட்டுக்கட்டை போட்டதோடு, மூவரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதாக வாக்குகொடுத்து ஆஃப் செய்துள்ளது. மற்றொருபுறம் ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்கள் கூட்டணிக்குள் வேண்டாம் என விஜய் சொன்னதாகவும் கூறப்படுகிறது. 

கடைசியாக தவெகவின் ஆறுதலாகவும், அடைக்கலமுமாக பார்க்கப்பட்டது புதுச்சேரி. ஆனால் பாஜகவின் செயல் தலைவர் நிதின் நபின் புதுச்சேரி வருகையின் போது ரங்கசாமியைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி தொடரும் என எனக்கூறி தவெகவினருக்கு மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். புதிய கட்சி என்பதால், தவெகவை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை எனக்கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: பாழும் கிணற்றில் தள்ளினாலும் நாட்டைக் காத்த அரசன்..! கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேருரை…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share