×
 

விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!

ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய், கரூர் சம்பவம், மனைவி விவாகரத்து விவகாரம் ஆகியவற்றுக்கு பின், பாஜ கூட்டணியில் சேர முடிவு செய்தார்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் இறுதி முடிவெடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (தேஜ) சேர்க்க முயற்சி எடுத்தபோது, விஜய் அதை நிராகரித்துவிட்டார்.

ஆரம்பத்தில் விஜய் கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், கரூர் சம்பவம் மற்றும் மனைவி விவாகரத்து விவகாரத்துக்குப் பிறகு அவர் மனம் மாறியதாகக் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு நெருக்கமானவர்களை சந்தித்த விஜய், தனது முடிவைத் தெளிவாகத் தெரிவித்தார்.

“திமுகவும் பிடிக்கவில்லை, அதிமுகவும் பிடிக்கவில்லை. இரண்டும் ஊழல் கட்சிகள். மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவே சினிமாவில் 200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன். அதிமுக இருக்கும் கூட்டணியில் சேர எனக்கு விருப்பமில்லை. என்னை விட்டுவிடுங்கள். தேர்தலை தனித்தே எதிர்கொள்கிறேன். என் பலம் என்ன என்பது மக்களுக்கு தெரியட்டும். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று விஜய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீங்களா? கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜியை திணறடித்த சிபிஐ கேள்விகள்?!

இந்தத் தகவல் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் “விஜய்க்கு கூட்டணியில் சேர விருப்பமில்லை என்றால் பரவாயில்லை. அவரது விருப்பப்படி செயல்படட்டும். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறியதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, விஜய் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

தவெகவுக்குள் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்யசாமி உள்ளிட்டோர் கூட்டணியை எதிர்த்ததும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இறுதியில் விஜய்யின் தனிப்பட்ட முடிவே நிலைத்தது.

திமுகவுக்கு எதிராக இரு முனைப் போட்டியை உருவாக்க அமித் ஷா மேற்கொண்ட முயற்சி இப்போது தோல்வியில் முடிந்துள்ளது. விஜய் தனித்து நிற்கும் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பியூஸ்கோயல் தமிழகம் வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடுகள் இறுதி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share