×
 

பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்திக்க ஆளுநர் நேரம் கொடுக்கவில்லை என தகவலானது வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் கடந்த சில நாட்களாக கடுமையான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதி கிடைக்காமல் இழுபறி நீடித்து வந்தது. இதனால் 2 எம்.எல்.ஏ.க்களை கொண்ட விசிகவின் ஆதரவிற்காக தவெக காத்திருந்தது. நேற்று மாலையே முடிவை அறிவித்திருக்க வேண்டிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று மாலை முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகின. இன்று மாலை சரியாக விடுதலை சிறுத்தைகள் தலைமையகமான அம்பேத்கர் திடலில் திருமாவளவனை நேரில் சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதத்தை திருமாவளவன் வழங்கினார். 

இதனையடுத்து உடனடியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விஜய் புறப்பட்டார். ஆளுநரை நேரில் சந்தித்து பெரும்பான்மைக்கான 118 சீட்டுகள் கிடைத்துவிட்டதையும், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் வழங்கவும் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். ஆனால் கிண்டி சென்று கொண்டிருந்த விஜய் ஆளுநரை சந்திக்காமல், மீண்டும் தனது வீட்டிற்கே திரும்பி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு கேரளா செல்ல ஆளுநர் அர்லேகர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜயை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததையடுத்து விஜய் ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல் பாதி வழியிலேயே வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

இதையும் படிங்க: #BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share