×
 

மிரளப்போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு..!! திருச்சியில் பாட்டு பாடி வாக்குச் சேகரித்த விஜய்..!!

திருச்சியில் விஜய் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தார். பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி என்றும் குறிப்பிட்டார். திமுகவையும் நம்பாதீர்கள் பாஜகவையும் நம்பாதீர்கள் என்றும் இருவரும் வேறு வேறு அல்ல என்றும் இருவரும் ஒன்றுதான் எனவும் தெரிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி காலையில ரெடியாகி வாக்காளர் அட்டையை கையில் எடுத்துக்கொண்டு முதல் ஆளாக பூத்-க்கு சென்று விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.

ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் நான்கு முனை, 40 முனை போட்டி என எத்தனை போட்டிகள் வந்தாலும் இங்கு இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்றும் கூறினார். ஒன்னு டிவிகே… இன்னொன்னு டிஎம்கே என்றார். அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: டெல்லிக்கு போங்க சார்… ஸ்டாலின் சர்க்காரை தூக்கி எறிவோமா? திருச்சியில் விஜய் மாஸ் பிரச்சாரம்..!!

இந்த விஜயை 100 சதவீதம் நம்பலாம் என்று உங்களிடம் கேட்க உரிமை இருக்கிறது எனவும் கூறிய விஜய் மைக்கை கீழே வைத்துவிட்டு கைகூப்பி தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நான் தன்னந்தனி ஆளு… ஏளனமா பாரு… அதிர போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு… விசில் அடிக்க ரெடியா..? என்ன பாட்டு பாடி மக்களிடம் விஜய் வாக்கு சேகரித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share