அணிலை ஆமையாக்கிட்டானுங்களே.... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்...!
திருச்சி விமான நிலையத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த த.வெ.க. தலைவர் விஜயை வரவேற்க, திருச்சி விமான நிலையத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்புகளை உடைத்து கொண்டு ஓடிய ரசிகர்கள், தொண்டர்கள், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால், அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார் விஜய் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். தொண்டர்களின் பெரும் கூட்டத்தாலும், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பாலும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து சீர்செய்யும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மரக்கடை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா? - பெண் தொண்டர்களுக்கு ஏற்பட்ட நிலையால் அதிர்ச்சியில் விஜய்... தவெக பரப்புரையில் பரபரப்பு...!
இருப்பினும் அவரது பிரச்சார வாகனத்தை முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஆமை வேகத்தில் ஊர்ந்து வரும் விஜயின் பிரச்சார வாகனம் 11 மணி நிலவரப்படி வெறும் 2 கிலோ மீட்டர் மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் விஜய் தொண்டர்கள் செய்து வரும் அன்புத்தொல்லையால் முன்னேற முடியாமல் சுற்றுப்பயண வாகனம் தவித்து வருகிறது. இதனால் திருச்சி மரக்கடைக்கு விஜய் எப்போது சென்று சேருவார்? அங்கு அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல்... திடீர் கடையடைப்பு... விஜய் வருகையால் திணறும் திருச்சி....!