×
 

விஜய் அமைச்சரவை பதவியேற்பில் வேற்றுமை! தவெக தலைவரை பின்பற்றாத ஆதவ் அர்ஜூனா!!

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவின் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் ‘ஜன கண மன’ மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. விழா முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது.

ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை 12 முதலமைச்சர்கள் பதவி வகித்த தமிழகத்தில், 13ஆவது முதலமைச்சராக விஜய் இன்று வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துள்ளார். நடிகராக புகழ்பெற்ற அவர், அரசியலில் நுழைந்து குறுகிய காலத்தில் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: Breaking News! என் நெஞ்சில் குடியிருக்கும்!!! CM விஜய் உணர்ச்சிகர பேச்சு!! திமுகவினருக்கு கொடுத்த வார்னிங்!

புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட சூழல் நிலவுகிறது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகிய ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அனைவரும் “ஆண்டவன் மீது ஆணையாக” என உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆதவ் அர்ஜுனா மட்டும் “உளமாற உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்.

முதலமைச்சர் விஜய் முதல் அனைத்து அமைச்சர்களும் ஆண்டவன் மீது ஆணையாக என உறுதிமொழியேற்ற நிலையில், ஆதவ் அர்ஜூனா மட்டும் கடவுள் மறுப்பு கொள்கையுடன் உளமாற உறுதிமொழிகிறேன் என கூறியது சர்ச்சையாகி உள்ளது.

இதையும் படிங்க: Breaking News! முதல்வர் விஜய் முதல் கையெழுத்து!! அதிரடி காட்டிய ஜனநாயகனின் சர்க்கார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share