×
 

போடுறா வெடிய... நாளை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி... ஆனா போலீஸ் கொடுத்த அதிரடி ஷாக்...!

நாளை திருவாரூரில் விஜய் பிரச்சாரம் நடத்த காவல்துறை 26 கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

திருவாரூரில் வரும்  20ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு  ரோட் ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட 26 விதிமுறைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தது.

திருவாரூர் தெற்கு வீதியில் வரும் 20ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் பிரச்சார பயண கூட்டம் 2மணி முதல் 3மணிவரை நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிரச்சாரம் நடைபெறும் தெற்கு வீதி பகுதியில் நேரில் ஆய்வு செய்தார் .

இதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரச்சாரக் கூட்டத்திற்கான அனுமதி பெற துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் சந்தித்து பேசினார் .

இதையும் படிங்க: அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

இதன் தொடர்ச்சியாக பிரச்சாரத்திற்கு காலை 9 மணிக்குள் கட்சியினர் தெற்கு வீதி பகுதிகள் வரவேண்டும் மேலும் ரோடு ஷோ நடத்தக்கூடாது பட்டாசு வெடிக்க கூடாது ,கமலாலய குளம் ,ஓடம்போக்கி ஆறு பாலத்தில் தடுப்பு அரன்களை தமிழக வெற்றி கழகத்தினர் அமைத்து கொள்ள வேண்டும் மேலும் போலீசாரின் நிபந்தனைகள் மீறப்படும் நிலையில் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்த காவல்துறையினருக்கு அனுமதி உண்டு உள்ளிட்ட 26 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share