கோபி வேணாம்!! கோவைல வச்சிக்கலாம்!! எடப்பாடியை பழிதீர்க்க செங்கோட்டையன் மாஸ்டர் ப்ளான்!! தவெக மும்முரம்!
கோபியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பதிலடி தரும் வகையில், கோவையில் த.வெ.க., மண்டல மாநாட்டை நடத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.
“ஓட்டு வாங்கினவர் ராஜினாமா கேட்டாரா?” என கோபி மேடையில் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை துவம்சம் செய்து பேசியதற்கு, இப்போது நேரடி கௌன்ட்டர் அடி கொடுக்க தவெக தயாராகி விட்டது!
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்தார். உடனே, செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில் எடப்பாடி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, “இங்கு அதிமுகவுக்குத்தான் பவர்” என பலம் காட்டினார். அந்த மேடையில் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்து பேசியும் செய்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோபி தொகுதியிலேயே விஜய்யை இறக்கி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தீவிரமாக வலியுறுத்தினர். ஆனால் கோபியில் காவல்துறை அனுமதி கிடைப்பது கடினம் என்பதால், புதிய பிளான் தயாராகி உள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தராவிடில் தவெகவுடன் கூட்டணி!! அகல கால் வைக்கும் காங்கிரஸ்!! திமுகவுக்கு தீராத தலைவலி!!
நேற்று முன்தினம் சென்னை வந்த செங்கோட்டையன், தவெக மாநில நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். அதில் கோபியில் விஜய் பொதுக்கூட்டத்துக்கு, காவல் துறை அனுமதி கிடைப்பதில் பிரச்னை உள்ளது. எனவே, கோபிக்கு பதில், கோவையில் வரும் ஜனவரி மாதத்தில், த.வெ.க., மண்டல மாநாடு நடத்துவது குறித்தும், அதில், விஜயை பங்கேற்க வைப்பது குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக வட்டாரத்தில் கோவை + கோபி பகுதி மக்களை ஒரே நேரத்தில் கவரும் வகையில் இந்த மாநாடு அமையும் என்கிறார்கள். “எடப்பாடி கோபியில் காட்டிய பலத்தை விட பல மடங்கு பெரிய கூட்டத்தை கோவையில் காட்டுவோம்” என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதால், அந்த மாவட்டத்திலேயே விஜய்யை இறக்கி பவரை காட்ட தவெக திட்டமிட்டிருப்பது எடப்பாடியை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது.2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக மாறப்போகும் இந்த கோவை மாநாடு.. யார் பலசாலி என்பதை தீர்மானிக்கப் போகிறது!
இதையும் படிங்க: டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்த OPS! பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? தனிக் கட்சியா?