புலி வாலை புடிச்சிட்டோமோ!! கலக்கத்தில் விஜய்!! ஸ்டாலின் கூட இப்படி பண்ண மாட்டாரு!! தவிக்கும் தவெக!
சிபிஐ விசாரணைகள் காரணமாக விஜய் நொந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் மொத்தமாக 15 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் விஜய் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் மீது கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போது இரண்டு கட்ட விசாரணைகளில் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி கிட்டத்தட்ட 15 மணி நேரம் (முதல் கட்டம் ஜனவரி 12-ஆம் தேதி 6+ மணி நேரம், இரண்டாவது கட்டம் ஜனவரி 19-ஆம் தேதி 6+ மணி நேரம்) கேள்வி பதில் நடந்தது.
விசாரணையின் முடிவில் விஜய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சாட்சி (witness) என்ற நிலையில் அழைக்கப்பட்ட விஜய், அளித்த பதில்களால் சந்தேக நபராக (suspect) மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கரூர் விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம்!! சிபிஐ விசாரணையில் பற்ற வைத்த விஜய்!! கசிந்தது புது தகவல்!
முக்கிய கேள்விகளில் ஒன்று: கரூருக்கு திருச்சியிலிருந்து வரும் வழியில் ஏன் தாமதம் ஏற்பட்டது? விஜய் "ரோடு வளைவு நெளிவாக இருந்தது" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் "தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும், உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராமல் நின்றது.
சாட்டிலைட் தரவு, போன் ரெக்கார்டுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அந்த 1 மணி நேரத்தில் நீங்கள் போனில் பேசியுள்ளீர்கள். எங்கே நின்றீர்கள்? ஏன் நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கரூர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் (chargesheet) விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆரம்ப FIR-இல் விஜய் பெயர் இல்லாத நிலையில், விசாரணை அடிப்படையில் அவர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு விஜய் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளிடம் புலம்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய் கூறியதாவது: "தமிழக அரசே விசாரணை நடத்தியிருந்தால் இவ்வளவு நெருக்கடி இருந்திருக்காது. தமிழக போலீஸ் விசாரணையில் நம்மை துன்புறுத்துகிறார்கள் என்று மைலேஜ் எடுத்திருக்கலாம். ஆனால் சிபிஐ விசாரணை வேறு மாதிரி செல்கிறது.
என்னை தேவையின்றி கோர்த்துவிட்டார்கள். ஸ்டாலின் கையில் வழக்கு இருந்திருந்தால் இப்படி நீடித்திருக்காது. அவர் நேரடியாக சீண்டவில்லை, சரி செய்யும் விதமாகவே பேசினார். சிபிஐ கேட்ட ஐடியாவை நாம் கேட்டிருக்கக் கூடாது. இனி டெல்லி இந்த வழக்கை காலம் முழுக்க வைத்து என்னை கரம் கட்ட திட்டமிடும்."
த.வெ.க. தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது என்பதால், தற்போது இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விஜய் மீது கை வைக்காமல், தமிழக போலீஸ் விசாரணையில் விபத்து என்று முடித்திருக்கலாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு த.வெ.க.வின் 2026 தேர்தல் திட்டங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. விஜய் தற்போது மன உளைச்சலுடன் இருப்பதாகவும், கட்சி வட்டாரங்களில் இது பெரும் விவாதமாகியுள்ளது.
கரூர் துயரம் தொடர்பான விசாரணை இன்னும் தொடரும் நிலையில், விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் சேருமா? அல்லது சாட்சியாகவே இருப்பாரா? தமிழக அரசியல் களம் இப்போது இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது!
இதையும் படிங்க: கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டுனாங்க!! சிபிஐயிடம் விஜய் கொடுத்த ஆதாரம்!! தவெகவினர் தகவல்!