×
 

எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே திமுகவை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

திருச்சியில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

"இன்று மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினோம். எங்கள் உறுதிமொழியாக '2026-ல் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்று கோரிக்கை வைத்தோம். கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் எழுப்பினோம். முதல்வர் கூறியபடி கருத்து கணிப்புகளை கடந்து இன்னும் அதிக இடங்களில் வெல்வோம். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்."

விஜய் திமுகவை 'அநீதி, அராஜகம், தில்லுமுல்லு' என்று விமர்சித்தது குறித்து கேட்டபோது அமைச்சர் பதிலளித்தார். "அது அவர்களின் கட்சி ஆண்டு விழாவில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக பேசியது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

ஆனால் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இடங்களை அல்ல, மக்களின் மனங்களை வென்றுள்ளோம். அது மக்களுக்கு தெரியும். மக்களின் மனங்களை வெல்வதற்கு என்ன பணிகள் தேவையோ அதை செய்வோம்."

மத்திய பட்ஜெட் குறித்தும் அவர் கடும் விமர்சனம் செய்தார். "மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதி 41%லிருந்து 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கோரினோம். 16வது நிதி ஆணையத்தில் நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் இந்த பட்ஜெட்டிலும் 41% தான் தொடர்கிறது. இது கவலை அளிக்கிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு வெறும் 4.097% மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு குறைத்தால் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்?"

"மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பெரிய திட்டங்களுக்கு நிதி இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு 3548 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. ஜல்ஜீவன் மிஷனுக்கு 3112 கோடி வழங்கப்படவில்லை. திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்த துறைகளுக்கும் நிதி இல்லை. விவசாயிகள், ஏழை எளிய மக்கள் உட்பட எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் இது" என்று கூறினார்.

இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவும் த.வெ.க.வும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அமைச்சரின் பதிலடி திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share