×
 

ரவுடியா? பாடிகார்டா சார்? அடிக்கிறாங்க சார்? பத்திரிகையாளர்கள் மீது அட்டாக்! விஜய் பவுன்சர்கள் பகீர்!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பனையூர்: நடிகர்-அரசியல்வாதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த பெரும் அரசியல் நிகழ்வு, வன்முறை சம்பவத்துடன் முடிந்து ஊடகத் துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்ததன் சாட்சியமாக நடந்த கூட்டத்தில், விஜயின் பவுன்சர்கள் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு நிருபரின் தலை காயமடைந்து ரத்தம் கசிவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் இன்று தவெக தலைமை அலுவலகத்திற்கு 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்றார். விஜய் நேரில் இருந்து அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி, கொங்கு மண்டலம் (கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு செயலாளர் பதவியை அளித்தார். அரசியல் வட்டாரங்களின்படி, செங்கோட்டையன் தவெகவின் முதல் பெரிய அரசியல் தலைவராக இணைவது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பெரும் பூஸ்ட்.

இதையும் படிங்க: 8 முறை எம்.எல்.ஏ!! ‘52 ஆண்டு வெற்றியாளர்’ செங்கோட்டையன் கடந்து வந்த பாதை!!

ஆனால், இந்த மகுட நிகழ்வை பதிவு செய்ய வந்த ஏராளமான பத்திரிகை நிருபர்களும், டிவி சேனல்களின் கேமராமேன்களும் பெரும் அதிர்ச்சியை சந்தித்தனர். செங்கோட்டையன் காரில் வருவதையும், அலுவலகத்துக்குள் செல்வதையும் படம்பிடித்து, வீடியோ எடுக்க முயன்றவர்கள் மீது திடீரென தவெக பவுன்சர்கள் தாக்கதல் நடத்தினர். “கேமரா மூடு… போ!” என்று கத்தியபடி அவர்களை கடுமையாக தள்ளி, தாக்கினர். வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதில் ஒரு பத்திரிகையாளரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் கசிந்தது. பரபரப்பு உச்சத்தில் இருந்தபோது, பத்திரிகையாளர்கள் பவுன்சர்களுடன் வாக்குவாதம் செய்தனர். “இவர்கள் எல்லாம் பாடிகார்டா… இல்ல ரவுடிகளா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர். அப்போது சமாதானம் செய்ய வந்த தவெக தேர்தல் பிரச்சாரப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அனைவரையும் அமைதிப்படுத்த முயன்றார். சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

கடைசியில், தாக்குதல் நடத்திய பவுன்சர் ஒருவர் மன்னிப்பு கேட்டதும், சம்பவம் சமாதானமானது. ஆனால், “ஜனநாயகத்தில் ஊடகம் நான்காவது சக்தி… அரசியல் கட்சி அலுவலகத்தில் இப்படி தாக்குதல் நடக்கலாமா?” என்ற கேள்வி தமிழக அரசியல்-ஊடக வட்டாரங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வந்திருக்கவில்லை.

அகில இந்திய அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து (அதிமுக) வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது இணைவு தவெகவை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் தவெகவின் உருவாக்கம் மீது கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் #JournalistAttack போன்ற ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன!

இதையும் படிங்க: 'சத்தம் பத்தாது விசில்போடு' விசில் சின்னம் கேட்கும் தவெக!! ஆட்டோவும் ஆப்சன்ல இருக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share