புதுச்சேரியில் 22 இடங்களா..?? விஜய் பிரசாரத்திற்கு NO பர்மிஷன்..!! 8 இடங்களை டிக் அடிக்க அறிவுறுத்தல்..!!
புதுச்சேரியில் 22 இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களைச் சென்றடையும் வகையில் பல்வேறு வடிவங்களில் பிரசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், புதுச்சேரியில் பிரசாரம் செய்ய தீவிரம் காட்டி வருகிறார். அவர் வரும் 5-ஆம் தேதி புதுச்சேரியில் 22 வெவ்வேறு இடங்களில் ரோடு ஷோ மற்றும் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான அனுமதியை புதுச்சேரி காவல்துறையிடம் அக்கட்சி சார்பில் கோரியிருந்தது.
எனினும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, காவல்துறை அதிகாரிகள் 22 இடங்களுக்கும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக 8 இடங்களில் மட்டும் ரோடு ஷோ மற்றும் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்ட த.வெ.க.வினர், விஜய்யின் பிரசாரத்திற்கு ஏற்றவாறு மாற்று இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியை முதன்மை மாநிலமாக்குவோம்! தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத் தொடக்கம்!
புதுச்சேரி தவெக நிர்வாகிகள் தற்போது அனுமதிக்கப்பட்ட 8 இடங்களை அடிப்படையாகக் கொண்டு, மீதமுள்ள இடங்களுக்கு பொருத்தமான மாற்று இடங்களை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் பிரசாரம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வருகைக்காக தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, மக்களிடையே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யின் பிரசார நிகழ்வு தவெகவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதுச்சேரி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்து, கட்சியின் வாக்குறுதிகளை முன்வைக்கும் வகையில் இந்தப் பிரசாரம் அமையும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, புதுச்சேரி காவல்துறை தரப்பில், பிரசாரத்தின்போது போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விஜய்யின் பிரசாரம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தவெகவினர் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பிரசாரத்தை திட்டமிட்டபடி முன்னெடுக்க தயாராக உள்ளனர். வரும் 5-ஆம் தேதி விஜய்யின் பிரசாரம் புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!