×
 

இணையத்தில் லீக்கான ஜனநாயகன்! தொண்டர்கள் அதிர்ச்சி! விஜய்க்கு சாதகமா? பாதகமா?

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் முழு திரைப்படமும் வெளியாகி உள்ளது.

சென்னை: விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே முழுமையாக இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் செயலியில் நேற்று முழு படமும் பரவியதால் தமிழகம் முழுவதும் பேச்சாகியுள்ளது. படம் வெளியாவதில் ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், இந்த லீக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட அரசியல் சதியா அல்லது திருட்டுத்தனமான செயலா என்பது குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது.

த.வெ.க. நிர்வாகிகள், “படத்தின் சில காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தி.மு.க.வினர்தான்” என குற்றம்சாட்டியுள்ளனர். படக்குழு சார்பில், “படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க! ஜனநாயகன் லீக்!! பாஜகவுக்கு தொடர்பில்லை - அண்ணாமலை ஆவேசம்!

படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்ததாக சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

த.வெ.க.வினர் இந்த சம்பவத்தை சாதகமாக பார்க்கின்றனர். “தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் லீக் ஆனதால் அனுதாப அலை உருவாகி, விஜய்க்கு ஆதரவு அதிகரிக்கும். பெண்களின் ஓட்டுகளும் கிடைக்கும்” என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் மற்றொரு பக்கம் பாதகமும் உள்ளது. 500 கோடி ரூபாய் செலவில் தயாரான படத்தின் ரிலீஸ் தாமதமாகி, தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், “இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்தார். சூர்யா, “இது மனதை உடைக்கும் அநீதி. இணையத்தில் பார்க்காதீர்கள். திரையரங்கில் பாருங்கள்” என வேண்டுகோள் விடுத்தார். சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த லீக் சம்பவம் தேர்தல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க! ஜனநாயகன் லீக்!! பாஜகவுக்கு தொடர்பில்லை - அண்ணாமலை ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share