×
 

விஜய் வைத்த செக்மேட்! செங்கோட்டையனுக்கு முதல் அசைன்மெண்ட்!! எடப்பாடியை நடுங்க வைக்கும் மாஸ்டர் பிளான்!

செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் விஜயுடன் இருந்தால், அது தவெகவுக்கு பலம் சேர்ப்பதுடன், கொங்கு மண்டலத்தின் தவெக வாக்கு வங்கியையும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை விஜய்யை ரகசியமாக சந்தித்த செங்கோட்டையன், இன்று காலை 10 மணிக்கு பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக கொடியை அணிந்து அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ஆனால் விஜய் இதோடு நிறுத்தவில்லை, செங்கோட்டையன் இணைந்த உடனேயே அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் மிகப்பெரிய மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்!

வரும் 30-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் 2-வது கட்டத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பே செங்கோட்டையனின் சொந்த மண்ணில் விஜய் மாஸ் என்ட்ரி கொடுத்தால், கொங்கு மண்டலமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரச்சார ரூட்டை வடிவமைத்த மாஸ்டர் மைண்ட் செங்கோட்டையன் இனி விஜய்யின் “போர் வியூகக்காரர்” ஆகப்போகிறார். இனி கொங்கு மண்டலத்தின் கூட்டங்கள், பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாவற்றையும் செங்கோட்டையனே தீர்மானிப்பார் என்று தவெக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படிங்க: நவ.27-ல் தவெகவில் இணையும் செங்கோட்டையன்! டிச.15ம் தேதி - கெடு விதிக்கும் ஓபிஎஸ் !! விழிபிதுங்கும் இபிஎஸ்!

தவெகவில் இதுவரை மூத்த அனுபவ தலைவர் யாரும் இல்லை. இப்போது 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு “நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்” பதவியும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முழு அதிகாரமும் கொடுக்கப்படலாம் என்று தகவல் பரவியுள்ளது. இது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதனால் அதிமுக தரப்பில் ஒரே பதற்றம். செங்கோட்டையனைத் தொடர்ந்து இன்னும் சில கொங்கு மண்டல நிர்வாகிகள் தவெகவுக்கு போய்விடுவார்களா? எடப்பாடி இந்த பின்னடைவை எப்படி சமாளிப்பார்? ஈரோட்டில் விஜய்-செங்கோட்டையன் காம்போ வந்தால் கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கும்? என்ற கேள்விகள் தான் இப்போது எல்லோரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

விஜய் ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். “கொங்கு மண்டலம் இனி தவெக கைவசம்” என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் போட ஆரம்பித்தாச்சு. 2026 தேர்தலுக்கு முன்பாகவே கொங்கு பகுதியில் பெரிய அரசியல் சுனாமி வரப்போகுதா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share