விஜய் பிரமாண்ட கம்பேக்!! பிரசார ஸ்டைலில் அதிரடி மாற்றம்!! புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு பக்கா ப்ளான் ரெடி!
9-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க. தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி: கரூர் சம்பவத்துக்குப் பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 9 அன்று புதுச்சேரியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ரோட்ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உப்பளம் துறைமுக மைதானத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி பெற்றார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் முதல் திறந்தவெளி பொதுக்கூட்டம் என்பதால், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததால் விஜய் சுற்றுப்பயணத்தை தள்ளி வைத்தார். அதற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்க கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார். இப்போது புதுச்சேரியில் ரோட்ஷோ நடத்த திட்டமிட்ட தவெகவுக்கு, பாதுகாப்பு காரணமாக போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையும் படிங்க: இனி ரயில்களில் ELECTRIC KETTLES-க்கு தடை..!! மீறினால் 5 வருஷம் ஜெயில்.. பறந்த வார்னிங்..!!
அதற்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முழு மைதானமும், 5 ஆயிரம் பேர் பங்கேற்பும் கோரினார். இதற்கு ஒப்புதல் கிடைத்தது.
துறைமுக மைதானத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. அதை வெளியேற்றி, டிராக்டர், பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. மேடை அமைக்கப்படவில்லை. விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுவார். ஹெலிபேட் பகுதியில் வாகனம் நிறுத்தப்படும். 5 ஆயிரம் பேர் பங்கேற்க கியூஆர் கோட் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 1,000 பேர் கொள்ளும் பாக்ஸ்களாக அமைக்கப்படுகின்றன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் தனி பகுதி. நுழைவு வாசலுக்கு கூடுதலாக 2 வாசல்கள் உடைத்து அமைக்கப்படுகின்றன.
டிசம்பர் 9 காலை 10.30 முதல் 12 மணி வரை கூட்டம். விஜய் சுமார் 45 நிமிடம் பேசுவார். 8-ம் தேதி இரவு பிரசார வாகனம் புதுச்சேரி வரும். கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் முதல் திறந்தவெளி பொதுக்கூட்டம் என்பதால் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 2026 தேர்தலுக்கு விஜய் தீவிர தயாராகி வரும் நிலையில், இந்த கூட்டம் தவெகவின் பலத்தை மீண்டும் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இணைந்த அடுத்த நாளே பதவி: தவெகவின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து விஜய் உத்தரவு..!!