விஜய் செய்த முக்கிய மாற்றம்!! ஆச்சரியத்தில் தொண்டர்கள்!! தவெக கூட்டத்தில் இதை கவனிச்சீங்களா?
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை தவெக கூட்டங்களில் நடக்காத சுவாரசிய சம்பவம் ஒன்று இன்று நடக்கும் தவெக கூட்டத்தில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்வீரர்கள் கூட்டம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தவெகவின் கூட்டங்கள் என்றால் விஜய் மட்டுமே மையமாக இருந்து, அவரது உரையும், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் போன்ற சிலரின் பேச்சும் மட்டுமே இருந்து வந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் முற்றிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் மேடையேறி உரையாற்றியது தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேடைக்கு விஜய் வந்தவுடன் தொண்டர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கம்போல விஜய் மட்டும் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு நடைபெறும் இந்த முதல் பெரிய கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.
இதையும் படிங்க: அந்த சத்தம்!! தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பறக்கும் விசில் சத்தம்!! தெறிக்க விடும் தொண்டர்கள்!
மாவட்டச் செயலாளர்கள், மாநில அளவிலான இளம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மேடையேறி உரையாற்றினர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், அதிமுகவில் கடைபிடிக்கப்பட்ட "ஜனநாயக மேடை" கலாச்சாரத்தை தவெகவிலும் புகுத்தியுள்ளார்.
"ஒரு கட்சி ஆலமரமாக வளர வேண்டுமானால் அதன் விழுதுகளும் (இரண்டாம் கட்டத் தலைவர்கள்) பேச வேண்டும். தலைவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் அது இயக்கமாக மாறாது" என்ற ஆலோசனையை அவர் வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தவெகவின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருந்து கீழ்மட்டம் வரை உற்சாகத்தை ஏற்படுத்தும் யுக்தி இன்று அரங்கேறியது.
கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவரான செங்கோட்டையன், தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கொண்டு வந்த முதல் பெரிய மாற்றம் இதுவாகும்.
இதற்கு முன்பு தவெக கூட்டங்களில் விஜய் மட்டுமே மையப்புள்ளியாக இருந்த நிலை மாறி, கட்சியின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த தலைவர்கள் மக்களுடன் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கட்சியின் அமைப்பு வலிமையை மேலும் பலப்படுத்தும் என்று தவெக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
மறுபக்கம், தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த 20-ஆம் தேதி பனையூரில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டமும், அதைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழு கூட்டமும் நடைபெற்றன.
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள், தொகுதி வியூகங்கள், பிரசார உத்திகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை தவெகவுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், தொண்டர்கள் விசில் அடித்தபடியே கூட்டத்திற்கு வந்தது கூட்டத்தின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது.
தவெகவின் இந்த புதிய அணுகுமுறை கட்சியை ஒரு வலுவான இயக்கமாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் போன்ற அனுபவசாலிகளின் வருகை தவெகவுக்கு புதிய பலத்தை சேர்த்துள்ள நிலையில், இன்றைய கூட்டம் கட்சியின் எதிர்காலத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக! இரண்டாக பிரியுதா காங்கிரஸ்? செங்கோட்டையன் பதில்!!