×
 

தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! மேல்மலையனூரில் பூஜை!! தேர்தலை சந்திக்க முழு மூச்சில் தயாராகும் விஜய்!

தமிழகம், புதுச்சேரியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் த.வெ.க., தனித்து களமிறங்குகிறது இதற்காக, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, இரண்டு கட்டங்களாக நேர்காணல் நடத்தப்பட்டது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, இரண்டு கட்ட நேர்காணல்களுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய், அதிக பணம் செலவு செய்யக்கூடிய வசதியானவர்களுக்கும், மற்ற கட்சிகளில் இருந்து த.வெ.க.வுக்கு வந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வேட்பாளர்களைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டன.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அங்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விஜய் ரகசியப் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!

புதுச்சேரி வேட்பாளர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். வரும் 21 அல்லது 22-ம் தேதி புதுச்சேரி வேட்பாளர் பட்டியலும், 23 அல்லது 24-ம் தேதி தமிழக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், வேட்பாளர் பட்டியலை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தயாரித்துள்ளார். கட்சி தலைமை அலுவலகத்திலும் பூஜை செய்யப்பட்டது.

மற்றொரு பக்கம், விஜய்க்கு சென்னை வடபழனியில் உள்ள ‘ஜே.எஸ். மஹால்’ திருமண மண்டபம் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மகன் ஜேசன் சஞ்சய் பெயரில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தை, தேர்தல் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ பட வசூலை எதிர்பார்த்திருந்த விஜய், படம் வெளியாகாததால் பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், அதனால் மண்டபத்தை விற்றதாகவும் செய்திகள் பரவுகின்றன.

த.வெ.க. தனித்து களமிறங்கும் முதல் பெரிய தேர்தலில் விஜய் எப்படியெல்லாம் தயாராகி வருகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share