'பிளான் B’-யைக் கையில் எடுத்த சசிகலா... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி எச்சரிக்கை...!
குறிப்பாக தென் மாவட்டங்களில் கடுமையான பரப்புரை செய்து வாக்குகளை பிரிக்க நேரிடும், இதனால் அதிமுக தோல்வியைத் தழுவக்கூடும் என தங்களது பிளான் பியையும் எடப்பாடி பழனிசாமிக்கு உணர்த்தியிருக்கிறார்களாம்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் விட்டு பேச போறேன்னு என அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் அமித்ஷா செயல்பாடுகள் எங்களுக்கு திருப்பதி அளிக்கவில்லை. அதனால் நாங்க என்டிஏ கூட்டணியில் இல்லை, இதுகுறித்து கூட்டணி யாரோடு என்பது குறித்து டிசம்பரில் முடிவெடுப்போம் அப்படின்னு ஒரு ஷாக் கொடுத்திருக்காரு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்காரு.
அடுத்து பார்த்தோம்னா, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருங்கிணைந்த அதிமுக தான் எல்லோருக்கும் நல்லது வெற்றிவாகை சூட முடியும், அப்படின்னு ஒரு நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டுருக்காங்க வி.கே.சசிகலா, அதை நான் ஆமோதிக்கிறேன் ஆதரிக்கிறேன்னு சொல்லியிருக்காரு முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம். அப்ப எல்லாத்துக்கும் ஒரு கனெக்சன் இருக்கு என்பதை தெளிவுபடுத்துகிறது.
டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் என எல்லாரும் சேர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு செக் வைக்கப்பதாகவும், அவருக்கு ஏதோ மெசேஜ் கொடுக்கிறாங்கன்னும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பா பேச்சு கிளம்பியிருக்கு. அந்த மெசெஜ் என்னவென்று பார்த்தால், எங்களை புறக்கணித்தால் ஆட்சி மாற்றம் நடக்காது, உங்களோட முதலமைச்சர் கனவும் பலிக்காது அப்படிங்கிறதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: அது உங்களுக்கே தெரியும்! தொண்டர்கள் கருத்தை பிரதிபலிப்பேன்… செங்கோட்டையன் சூசகம்
தென் மாவட்டங்களில் இன்று வரை எங்களுக்கு தான் வாக்கு வங்கி அதிகமிருக்கிறது. ஒருவேளை எங்க டீமை புறக்கணித்துவிட்டுச் சென்றால், இழப்பு உங்களுக்குத் தான் ஏற்படும், முதலமைச்சர் நாற்காலியும் கிடைக்காது என ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் என மூவர் அணி எடப்பாடிக்கு சேலஞ்ச் விடுத்துள்ளனர்.
அதனால் நாங்க என்ன சொல்றோம்ன்னா, நீங்க எங்க எல்லோரையும் இணைச்சுக்கோங்க. யாரும் உங்களுடைய முதலமைச்சர் நாற்காலியை எதிர்பார்க்கல. நீங்களே முதலமைச்சர் நாற்காலியில அமரலாம் என்பதைதான் நாங்க திரும்ப, திரும்ப பதிவு செய்கிறோம் என வி.கே.சசிகலா உறுதிப்படுத்தியிருக்காங்களாம். முடியாதுன்னு இழப்பதற்கு எங்களுக்கு எதுவும் இல்லை. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மாஜிக்களை எல்லாம் ஒன்று சேர்த்து வர உள்ள தேர்தலில் களம் காண்போம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கடுமையான பரப்புரை செய்து வாக்குகளை பிரிக்க நேரிடும், இதனால் அதிமுக தோல்வியைத் தழுவக்கூடும் என தங்களது பிளான் பியையும் எடப்பாடி பழனிசாமிக்கு உணர்த்தியிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா