×
 

உலக தலைவர்களுடன் போஸ் மட்டும்தான்... பாகிஸ்தானிடம் மாஸ்காட்ட முடிந்ததா மோடி..? ஜோதிமணி காட்டம்..!

இந்தியா உலக அளவிலான செல்வாக்கையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியம்.

''மோடி அரசின் வெளிநாட்டு கொள்கை முற்றிலும் தோல்வியடைந்ததைத் தெளிவாக காட்டுவதாக தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.  

இதுகுறித்து விமர்சித்துள்ள அவர், ''பாகிஸ்தான் போன்ற பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டுக்கு ஐஎம்எப் உதவித்தொகை வழங்கும் முடிவை இந்தியா தடுக்க முடியாமல், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம், மோடி அரசின் வெளிநாட்டு கொள்கை முற்றிலும் தோல்வியடைந்ததைத் தெளிவாக காட்டுகிறது. 

மேலும் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் முதலில் அறிவித்திருப்பது இந்தியாவின் வலிமையை,உலக அளவிளான மதிப்பை சீர்குலையச் செய்துள்ளது. இது தொடர்பாக மோடி அரசின் மௌனம் அதிர்ச்சியளிக்கிறது. 

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் தொடரும்..! மோடியின் க்ரீன் சிக்னல்... இனி பாக்-ன் தலையே சிதறும்..!

இதே போன்ற ஒரு சூழலை 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் இந்திரா காந்தி வீரத்தோடும், வேகத்தோடும் அணுகிய விதத்தை இந்ததேசம் இரண்டு நாட்களாக கொண்டாடி வருவதை நாம் அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது. மோடி அரசின்  வெளியுறவுக் கொள்கை தவறானது என்று  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து  எச்சரித்து வந்தார். இப்பொழுது அது உண்மையாகிவிட்டது.

 இந்த நேரத்தில் இந்தியா உலக அளவிலான செல்வாக்கையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியம். ஆண்டாண்டுகளாக காங்கிரஸ் கட்சி உலக அளவில் ஏற்படுத்திய இந்தியாவிற்கான மதிப்பு மிகுந்த, வலிமையான  இடத்தை மீட்டெடுப்பது அவசியம். உலக அரங்கில் இந்தியா மீண்டும் வழிகாட்டும் சக்தியாக திகழ வேண்டிய தருணம் இது.

வெறும் விளம்பரங்கள், உலக தலைவர்களை புகைப்படங்களுக்காக கட்டியணைத்தல் மட்டுமே ஒரு தேசத்தின் வெளிநாட்டுக் கொள்கையாக இருக்கமுடியாது என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். நாம் அரசியல் ரீதியாக எதிரெதிர் கட்சிகளாக இருக்கலாம்.

ஆனால் நாட்டைக் காப்பதில் ஒன்றுபட்டு நிற்பதும், முக்கியமானகொள்கை நிலைப்பாடுகளில் தேசத்தின் நலனை முன்னிறுத்துவதும் அவசியம். தேசநலன் கருதி எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துக்களை மோடி அரசு செவிமடுக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவது அவசியம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நேற்று ஒரே இரவில் பாகிஸ்தானை பஸ்பமாக்க காத்திருந்த இந்தியா... குறுக்கே புகுந்து காப்பாற்றிய டிரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share