×
 

விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

கடந்த இரு நாட்களாக, பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்துக்கு சென்ற அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், கட்சி தலைவரான நடிகர் விஜயை சந்தித்து பேசி உள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில் பரபரப்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கட்சித் தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்த த.வெ.க. முக்கியத் தலைவர்கள், “தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. 

‘விசில்’ சின்னத்துக்கு ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் ஓட்டு போட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் சூழல் உள்ளது. எனவே ஆட்சி அமைப்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதை சந்தோஷமாகக் கேட்டுக்கொண்ட விஜய், “எனக்கும் அப்படித்தான் தகவல்கள் வருகின்றன. ஆனால் இப்போதைக்கு நமது ஒரே இலக்கு, பதிவான ஓட்டுகள் சரியாக எண்ணப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுதான். எனவே அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் முழு கவனத்தையும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: டிராபிக் ஜாம்!! வாக்குப்பதிவுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்!! 2. கி.மீ., தூரம் ஸ்தம்பித்தது சாலை!

இதன் தொடர்ச்சியாக, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ஆனந்த் ஆகியோர், தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள 40 வேட்பாளர்களை சென்னை பனையூர் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சிறப்பு ஆலோசனை நடத்தினர்.

அவர்களிடம், “த.வெ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 40 தொகுதிகள் குறித்த தகவல், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கும் தெரியும். எனவே அந்தத் தொகுதிகளில் ஏதேனும் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை EVM பாதுகாப்பு அறையைச் சுற்றி த.வெ.க.வினர் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்ற தொகுதிகளிலும் கண்காணிப்பை தளர்த்தக் கூடாது” என்று விஜய் சொல்லச் சொன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காரணமாக ஓட்டுகள் சிதறியுள்ளன. எனவே பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும். சொற்ப வித்தியாசத்தில் தோற்றவர்கள் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டு எண்ணிக்கை முழுவதும் எச்சரிக்கையுடன் இருங்கள்” என்று இரண்டாம் கட்டத் தலைவர்கள் அறிவுறுத்தினர்.

த.வெ.க.வினர் இப்போது ஓட்டு எண்ணிக்கை மையங்களில் முழு கவனத்துடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சி அமைப்பது குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ள நிலையில், கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். 

இதையும் படிங்க: கோவை வடக்கா? மொடக்குறிச்சியா? அண்ணாமலை களமிறங்குவது எங்கே? பாஜக வட்டாரங்களில் கசிந்த தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share