தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!
விஜய் முதலமைச்சர் ஆகவில்லை என்ற விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றிய போதும் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. மூன்று முறை ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தும் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமல் தட்டிக்கழித்த ஆளுநர், இறுதியாக பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளைக் காட்டினால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன் எனத் தெரிவித்தித்தார்.
கிட்டத்தட்ட ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 பேர், விசிக உறுப்பினர்கள் இருவர் என மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அதற்கு முன்னதாக விஜய் 108 தொகுதிகளில் வென்றும் முதலமைச்சராக ஆட்சி அமைக்க முடியாமல் போனது தவெக தொண்டர்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. இதனால் அதிருப்தி அடைந்த தவெகவினர் சோசியல் மீடியாக்களில் போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தும் வந்தனர்.
இதற்கிடையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதுமனை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியும், வள்ளியூர் ஒன்றிய தொண்டர் அணி இணை அமைப்பாளருமான இசக்கியப்பன் என்பவர் கடண்ட 9ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். விஜய் முதலமைச்சர் ஆகாததால் விரக்தியில் இருந்த இசக்கியப்பன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தவெக தொண்டர்களிடையே பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!