×
 

“போட்டாரே ஒரு போடு”... அமித் ஷாவையே மிரண்டுபோக வைத்த அண்ணாமலை... திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இதுவா?

முதல்வராகவது பாஜக கடமை என அண்ணாமலை பேசியதும் அரசியல் களத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக்க பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய அமைச்சர் அமித் ஷா, ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற சோனியாவின் கனவும் உதயநிதியை முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவும் நிறைவேற போவதில்லை என்றார். மேலும் எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவது பாஜக கடமை என அண்ணாமலை பேசியதும் அரசியல் களத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

இதுநாள் வரை இபிஎஸ்ஐ தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று கூட சொல்லாமல் தவிர்த்து வந்த அண்ணாமலை திடீரென மனமாற்றம் அடைந்து அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்காமல் ஓயமாட்டோம் என்ற அளவுக்கு பேசியதற்கான காரணம் எதுவாக இருக்கும் என்பதுதான் கமலாலய காரிய கர்த்தாக்களின் மனதில் கரை புரண்டு ஓடும் எண்ணமாக இருக்கிறது. பாஜகவின் முதலாவது பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய அமித்ஷா அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாகவும், சிறையில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினர். தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி பல மாதங்கள் சிறையில் இருந்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அமிஷா வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எளிதாக 39% ஓட்டுக்களை பெற்றுவிடும் என்றார். 

மேலும் இந்தியா கூட்டணி கனவு காண்பதாகவும் ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது என்றும் சோனியாவின் ஒரே லட்சியம் ராகுளை பிரதமராக்குவது என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் ராகுல் பிரதமராகவும் உதயநிதி முதல்வராகவும் முடியாது என்ற அமித் ஷா மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் உறுதியாக வெல்லும் என திட்டவட்டமாக தெரிவித்தார். 

 அதற்கு  முன்னதாக பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய வேலையை செய்தாக வேண்டும் என்றும், இப்போது எதிர்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர வைக்க வேண்டியது கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டரின் பொறுப்பு என்றும் கூறினார். ஆனால் அடுத்த எட்டு மாத காலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக நம்முடைய கட்சிக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய உங்க ஒருத்தருக்கு இருக்கிறது என்றார். 

இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பூத்து தலைவருக்கும் பூத்தில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்களுக்கும் அடுத்த எட்டு மாத காலம் கடுமையாக உழைத்து திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சியை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவரும், எதிர்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவருமான அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய ஒவ்வொரு பாஜக தொண்டனின் கடமை என போட்டாரே ஒரு போடு.

பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷாவின் பேச்சை காட்டிலும் அண்ணாமலையின் பேச்சுதான் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஏனெனில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதை ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலை எதிர்த்து வந்தது ஊரறிந்த உண்மை. பல நேரங்களில் இதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி செய்தியாளர் சந்திப்பு, பொதுக்கூட்டம் என பல இடங்களில் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகவும், காட்டமாகவும் விமர்சித்து வந்தார். இந்த நிலையில்தான் தேசிய தலைமையின் கட்டாயத்தால் அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலை பதவி பறிக்கப்பட்டது. 

இருப்பினும் கட்சியில் அவருக்கான முக்கியத்துவத்தை எள்ளளவும் குறையாத அளவுக்கு தேசிய தலைமை பார்த்து கொண்டாலும், அவ்வப்போது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அண்ணாமலை பேசி வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைக்க வேண்டியது பாஜக தொண்டர்களின் பொறுப்பு என அண்ணாமலை பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அண்ணாமலையின் திடீர் மனமாற்றத்திற்கு அமித் ஷா தான் காரணம் என்கித்ன்றனர் அரசியல் விமர்சகர்கள். ஏனெனில் கடந்த முறை தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்த அமித் ஷா, நட்சத்திர ஓட்டலில் வைத்து அண்ணாமலைக்கு பாடம் எடுக்காத குறையாக அட்வைஸ் அண்ட் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் தான் இந்தமுறை அமித் ஷாவுக்கு முன்னாடி அடக்கி வாசித்த அண்ணாமலை, அவரை கூல் செய்வதற்காக அதிமுக - பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என தொண்டர்களிடையே அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share