அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மெண்ட்! டெல்லியிலிருந்து ஓலை! காரைக்குடியில் களமிறங்கும் பாஜக!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கிய தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. பாஜக மேலிடம் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காரைக்குடி தொகுதி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கிய தொகுதிகளுக்கான சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமித்தது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜக காரைக்குடியை விடுவதாக தெரியவில்லை. அந்த தொகுதியின் மீது கட்சி அதீத ஆர்வம் காட்டுவதற்கு சில வலுவான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, காரைக்குடியில் வணிக சமூகத்தினரும் தொழில்முனைவோரும் அதிகம் வசிக்கின்றனர். வர்த்தக பிரிவினரிடம் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரையும் இளைஞர்களையும் கவர முடியும் என்று கட்சி நம்புகிறது.
பாஜக காரைக்குடியை விடுவதாக தெரியவில்லை. அந்த தொகுதியின் மீது கட்சி அதீத ஆர்வம் காட்டுவதற்கு சில வலுவான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, காரைக்குடியில் வணிக சமூகத்தினரும் தொழில்முனைவோரும் அதிகம் வசிக்கின்றனர். வர்த்தக பிரிவினரிடம் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரையும் இளைஞர்களையும் கவர முடியும் என்று கட்சி நம்புகிறது.
இதையும் படிங்க: குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!
அண்ணாமலை காரைக்குடியில் போட்டியிடுவாரா என்ற யூகங்கள் தீவிரமாக பரவி வருகின்றன. அவரை சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமித்தது, தேர்தலுக்கு முன்பே கள யதார்த்தத்தை நேரடியாக கையாள வழிவகுத்துள்ளது. கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளும், தற்போதைய அரசியல் மாற்றங்களும் அண்ணாமலை போன்ற வலுவான பிம்பத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கட்சி சீனியர்கள் கருதுகின்றனர்.
காரைக்குடியை “சோஷியல் இன்ஜினீயரிங்” மூலம் கைப்பற்ற பாஜக திட்டமிடுகிறது. ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலைக்கு கல்வி நகரமான காரைக்குடியில் இளைஞர்களும் பட்டதாரிகளும் மத்தியில் தனி ஈர்ப்பு உள்ளது. வர்த்தக சமூகத்தின் ஆதரவும் முக்கியம்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் சீமான் காரைக்குடியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும். சீமான் பிரிக்கும் ஓட்டு பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சிகளின் அதிருப்தி வாக்குகளாக இருக்கும். அண்ணாமலையின் வருகை போட்டியை அதிகரித்தாலும், காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய கட்டமைப்பை தாண்டி பாஜக வெற்றி பெறுவது பெரிய சவாலாகவே உள்ளது.
இதையும் படிங்க: மொத்தமும் போச்சு!! திமுக தலையில் இறங்கிய பேரிடி! வட மாவட்டங்களில் கடும் அதிருப்தி! உளவுத்துறை சர்வே!