மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?
நெல்லை தொகுதியை விட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாறியிருப்பது அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இவரது சொந்த மாவட்டம் நெல்லை மாவட்டம் என்பதால் இங்கேயே இவரது உறவினர்கள் உள்ளிட்ட தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருப்பதால் எத்தனையோ ஆண்டுகளை கடந்த அரசியலில் பயணித்த போதிலும் நெல்லை தொகுதியை விட்டு மாறாமல் இங்கேயே அரசியலில் போட்டியிட்டு களம் கண்டு வந்திருந்தார்.
நெல்லை தொகுதியில் ஒரு சென்டிமெண்ட் என்னவென்றால் ஒருமுறை வெற்றி பெற்றால் மறுமுறை வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படாமல் தோல்வியடையக்கூடிய நிலை வரும். இதே போல் தான் கடந்த 2011 முதல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெறுவார் மறுமுறை தோல்வி அடைவார்.
இந்த செண்டிமெண்ட் தற்போதும் அவருக்கு ஒர்க் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே வேறு தொகுதியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை சத்தம் இல்லாமல் செய்து வந்தார். தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மற்றும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார். அதில் பாஜக போட்டியிடும் தொகுதி பட்டியலில் நெல்லை தொகுதி இல்லை. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுகிறார் என்று கூறியதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!
தற்போது அவர் சாத்தூர் தொகுதியை முழுமையாக நம்பி அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான முழு வீச்சில் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் நெல்லை தொகுதியை விட்டுவிட்டு பாஜகவினர் சென்று விடுவார்கள் என அதிமுகவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதுவரை பங்கேற்ற தேர்தல்களில் நயினார் நாகேந்திரன் பெற்ற வாக்கு விவரங்கள் இதோ...
2011:
1. நயினார் நாகேந்திரன் அதிமுக - 86,220 வாக்குகள். 38,491 வாக்குகள் முன்னிலை.54.81 சதவீதம்.
2. ஏ எல் எஸ் லட்சுமணன் திமுக - 47,729 வாக்குகள்.30.34 சதவீதம்
2016:
1.ஏ.எல்.எஸ் லட்சுமணன், திமுக - 87,761 வாக்குகள். 601 வாக்குகள் முன்னிலை.43.64 சதவீதம்.
2. நயினார் நாகேந்திரன் அதிமுக - 81,160 வாக்குகள்.43.32 சதவீதம்.
3. மாடசாமி தேமுதிக.. 8640 வாக்குகள் - 4.61 சதவீதம்.
2021:
1. நயினார் நாகேந்திரன் பாஜக - 92,282 வாக்குகள். 23,107 வாக்குகள் முன்னிலை.46.70 சதவீதம்.
2. ஏ எல் எஸ் லட்சுமணன் திமுக - 69,175 வாக்குகள்.35.01 சதவீதம்.
3. சத்யா, நாம் தமிழர் கட்சி... 19,162 வாக்குகள். 9.70 சதவீதம்.
இதையும் படிங்க: தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்கும் திமுக..! அழிவு நிச்சயம்... நயினார் கொந்தளிப்பு..!!