முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!
முதல்வரின் மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க நிகழ்ந்ததென அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்சந்திப்பு, முதல்வரின் மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க நிகழ்ந்ததென அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
இருப்பினும், இந்த சந்திப்பின் பின்னணியில் வேறு அரசியல் நோக்கங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப நாட்களாக சீமான், நடிகை விஜயலட்சுமி சரமாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக திமுகவையோ, முதலமைச்சரையோ சீமான் விமர்சித்தால் அதற்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் விமர்சித்து வருகிறார். இதற்கு பின்னணியில் ஒருவேளை திமுக தான் இருக்கும் என நாம் தமிழர் தம்பிகள் சந்தேகித்து வருகின்றனர்.
அந்த நடிகை வெளியிடும் வீடியோக்கள், அதில் இடம்பெறும் விமர்சனங்கள், அனைத்தும் திமுக ஆதரவால் இயக்கப்படுகின்றன என சிலர் குற்றம்சாட்டியிருந்தனர். இதே சூழ்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை சீமான் சந்தித்ததாக, பல்வேறு ஊடகங்களும், வட்டாரங்களும் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: எந்த பிரச்சனையும் இல்லை! சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்குங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!
சந்திப்பின் போது சீமான், முதல்வரிடம் சில கோரிக்கைகளை எழுப்பியதாகவும், அதன் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் அபிசியலாகவே பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நடிகை விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வைக்கும் படி முதலமைச்சரிடமோ க்ஷ்
இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாள், செய்தியாளர்களை சந்தித்த சீமான், தனது பேச்சின் போது ஏற்பட்ட தவறான கால குறிப்புகள் புதிய சர்ச்சையை கிளப்பின. குறிப்பாக, "காமராஜர் இறந்த போது அண்ணா கதறி அழுதார்" என்ற அவரது கூற்று, வரலாற்று உண்மைக்கு முரணாக இருந்தது. காரணம், அண்ணா 1969ல் இறந்தவர்; காமராஜர் 1975ல் இறந்தவர். இது ஒரு "டங் ஸ்லிப்" என்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளதோடு, "இத்தகைய தவறுகள் தலைவர்களுக்கே ஏற்படுவது சகஜம்; இதை பெரிதுபடுத்த வேண்டாம்" எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காமெடி பண்ணாதீங்கப்பா... பாஜகவை திமுக எதிர்க்குதா? விளாசிய சீமான்..!