×
 

பெண்களுக்கு பேரதிர்ச்சி... மகளிர் விடியல் பயணம் பெயர் திடீர் மாற்றம்... சலுகையிலும் கைவைத்ததா தவெக?

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த 366 மகளிர் விடியல் பயணம் பேருந்துகளிலும் பெயர்கள் மாற்றப்பட்டு, 'மகளிர் பயணம்' என்ற பெயர் பலகைகள் பொருத்தம்.

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காகவும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்யும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு 'மகளிர் விடியல் பயணம்' என்று பெயரிடப்பட்டு, அரசுப் பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.கன்னியாகுமரி மாவட்டத்திலும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. மாவட்டத்தில் மட்டும் சுமார் 366 பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்தன, இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசு, இந்தத் திட்டத்தின் பெயரை 'மகளிர் பயணம்' என மாற்றம் செய்துள்ளது. இப்பெயர் மாற்றம் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த 366 'மகளிர் விடியல் பயணம்' பேருந்துகளிலும் பெயர்கள் மாற்றப்பட்டு, 'மகளிர் பயணம்' என்ற பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்படி, திட்டத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர, பயண சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. பெண்கள் முன்பைப் போலவே எவ்விதக் கட்டணமும் இன்றி அரசுப் பேருந்துகளில் தொடர்ந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க முடியல..! தமிழ்நாட்டை எப்படி காப்பாத்தப் போறாங்க..? உதயநிதி சவால்!

இதேபோல் நெல்லை மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் 414 பேருந்துகள் மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் மகளிருக்கு இலவசமாக பயன்பாட்டில் இருந்தது கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது 414 பேருந்துகளிலும் மகளிர் பயணம் என இந்த திட்டத்தின் பெயரை மாற்றி அலுவலர்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: Gen Z வாக்காளர்களை கவர திமுகவில் புது திட்டம்! புதிய அணிகளை உருவாக்கும் உதயநிதி ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share