×
 

முதல்வர் விஜய் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க மாணவர்கள் ஆர்வம்! பல்கலை.க்கு வந்து உரையாற்ற அழைப்பு!

அமெரிக்காவின், 'யேல்' பல்கலையிலிருந்து சில மாணவர்கள், 'முதல்வர் விஜய் குறித்து நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவர் எங்கள் பல்கலைக்கு வந்து உரையாற்ற வேண்டும்' எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சி இப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஹரியானாவின் அசோகா பல்கலையில் இந்திய பொருளாதார அரசியல் பாடம் கற்பிக்கும் விசிட்டிங் புரபசராகப் பணியாற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியின் வகுப்பில் மாணவர்கள் முதல்வர் விஜய் குறித்த ஆய்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வகுப்புக்கு வந்த பிரவீன் சக்கரவர்த்தியை மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். “எதற்கு இந்த வரவேற்பு?” என ஆச்சரியப்பட்ட அவருக்கு, “நீங்கள் எம்.பி. ஆகிவிட்டீர்கள் என்பதால்” என்று மாணவர்கள் பதிலளித்தனர். மகிழ்ச்சியடைந்த பிரவீன், மாணவர்களின் அடுத்த கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

“தமிழக முதல்வர் விஜய்க்கு நீங்கள் நெருக்கம். அவரது அரசியல், தலைமைத்துவம் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என மாணவர்கள் கேட்டதும், பிரவீன் சக்கரவர்த்தி மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். “நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்” என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!

இதற்கிடையே, உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் யேல் பல்கலையிலிருந்து சில மாணவர்கள் பிரவீன் சக்கரவர்த்திக்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர். “முதல்வர் விஜய் குறித்து ஆய்வு செய்ய விரும்புகிறோம். அவர் எங்கள் பல்கலைக்கு வந்து உரையாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர். பிரவீன் சக்கரவர்த்தி உடனடியாக “நிச்சயம் முதல்வரை அழைத்து வருகிறேன்” என பதில் அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் முதல்வர் விஜய் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது யேல் பல்கலைக்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 1968-ல் யேல் பல்கலையில் விசிட்டிங் பெலோஷிப் பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர் ஆவார்.

முதல்வர் விஜய்யின் தலைமைத்துவம் இந்தியாவுக்குள் மட்டுமின்றி, உலக அளவிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அரசியல் பயணம் குறித்த ஆய்வுகள் அதிகரிப்பது தமிழக அரசியலின் புதிய உயரத்தை உணர்த்துகிறது. 

இதையும் படிங்க: போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share