சுட சுட அறுசுவை..நாள் முழுவதும் அன்னதானம் .. அழகர் மனம் குளிர வைத்த அரசு
அழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இந்து அறநிலைத்துறை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் ,சமயபுரம் ,விழுப்புரம் மேல்மலையனூர், கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
தற்போது மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் ,கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில்களிலும் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவிலில் வாழை இலை விரித்து அறுசுவை உணவை அமைச்சர் மூர்த்தி பக்தர்களுக்கு பரிமாறினார்
அழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதை எடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
இதையும் படிங்க: குக்கரில் காத்திருந்த எமன். பெண்ணுக்கு .சமையல் அறையில் நிகழ்ந்த துயரம்