விடிந்ததுமே அதிர்ந்த தலைநகரம்... இளைஞர் உயிரைக் குடித்த ‘கேங் வார்?’... கொடூரமாக வெட்டிக்கொலை...!
பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர், நேற்று தனது வீட்டின் வெளியே வந்து தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த இரண்டு பெண்கள், அஜித்திடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, அவரை வீட்டின் வாசல் பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு அஜித்துடன் அந்த இரண்டு பெண்களும் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அஜித்தை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித்தின் தந்தை நடராஜனும், தாய் சரசம்மாளும் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர். அப்போது அந்த மர்ம நபர்கள் அவர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!
இந்தச் சம்பவத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை எதற்காக நடைபெற்றது என்பது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரீஷ் என்ற நபரை கைது செய்திருப்பதாகவும், அவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரீஷின் நண்பர் ராஜேஷ் என்பவர் தலைமறைவாக இருப்பதால், அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு கும்பல்களுக்கு இடையே, அதாவது உயிரிழந்த அஜித்தின் குழுவுக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஹரீஷின் குழுவுக்கும் இடையே, அந்தப் பகுதியில் யார் பெரிய ஆள் என்பதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை நீடித்து வந்ததாகவும், இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தற்போது பூதாகரமாகி, கொலைச் சம்பவத்தில் முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!