“அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!
தமிழகத்தில் முதன் முறையாக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர் - அதன் பிறகு தான் இந்தியா முழுவதும் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வனாலயத்தில் பனை விதை வழங்கும் விழா நடைபெற்றது.பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் வனாலயம் சார்பில் பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன.இந்த நிகழ்ச்சிக்காக முன்னாள் சபாநாயகர் அப்பாவு 50 ஆயிரம் பனை விதைகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி வனாலயத்தில் நடைபெற்றது.
வனாலய நிர்வாகிகளிடம் பனை விதைகளை முன்னாள் சபாநாயகர் அப்பாவு ஒப்படைத்தர்.அதனை தொடர்ந்து செய்தியாள்ரகளை சந்தித்த அவர் இடை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரிய வெற்றி பெறும்.தவெக வேட்பாளர்களை எந்த ஊருக்குள்ளும் பொதுமக்கள் உள்ளே விடுவதில்லை. போலீஸ் பாதுகாப்போட தான் செல்கிறார்கள்.மக்கள் ஏதோ ஒரு மாயை, இன்ஸ்டாகிராம் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி. ஆட்சிக்கு வந்துட்டாங்க. ஆனால் ஆட்சிய எப்படி நடத்த வேண்டும் என தெரியவில்லை.
தூய ஆட்சின்னு சொல்றாங்க. தாராபுரம் மதுராந்தகத்தில் அதிமுக வென்றது. ஆளுக்கு 50 கோடி ரூபாய் வாங்கிட்டு தான் கட்சி மாறினார்கள். அதனால் வாக்களித்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீங்க 50 கோடி ரூபாய்க்கு விலை போயிட்டு, திரும்பவும் வந்து எங்ககிட்ட நிற்கிறீங்களேன்னு கடுமையான கோபத்தில் இருக்காங்க.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்... அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!
தாராபுரத்தில் அமராவதி அணைத் தண்ணீர் முறையாக திறக்கவில்லை. புவியியல் ரீதியா அவங்களுக்கு ஒரு சரியான புரிதல் இல்லாததால் ரொம்ப வறட்சி ஆயிடுச்சு. முழு கடனையும் விவசாயிக்கு ரத்து பண்றோம்னாங்க, பண்ணல. அது ரொம்ப வருத்தத்தில் இருக்காங்க. சாமானிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை செய்வாங்க. அந்த வேலை கொடுக்கல. கொடுத்த வேலைக்கு முழு சம்பளமும் கொடுக்கல. ரொம்ப பாதிப்பில் இருக்காங்க.
நம்முடைய மாண்புமிகு முன்னாள் முதல்வர் மாதம் 1000 ரூபாய் எல்லாருக்கும் உரிமைத் தொகை கொடுத்தாங்க. இவங்க 2500 ரூபாய் தருவதாக கூறினார்கள் தரவில்லை.மாதம் 1000 ரூபாய் பெரிய இழப்பு என பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு இருக்கு.
சி.எம். விஜய் பிரச்சாரம் செய்த பிறகு களம் மாறுமா என்ற கேள்விக்கு, அவர் வந்துட்டு போவாரு அவ்வளவுதான். நடிகர்களைப் பார்க்கிறதுக்கு கூட்டம் கூடும். அவருக்கு ஒரு கிளாமர் உள்ளது. எம்.ஜி.ஆர் மாதிரியோ, ஜெயலலிதா மாதிரியோ பெரிய ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளவர் கிடையாது.
சட்டமன்றத்தில் தூங்கிட்டே இருக்காரு, ஒன்னும் பேச மாட்டேங்கிறாருன்னு மக்களே பேசுகிறார்கள். வருங்காலத்தில் அவர்களை மக்கள் நம்ப மாட்டாங்க.அவர்களை நம்பி ஆட்சியைக் கொடுக்க முடியாது என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வெள்ளி மாலை... முதல்... திங்கள் காலை 10 மணி வரை முதல்வரை எங்கேயாவது பார்க்க முடியுமா. எங்கேயும் பார்க்க முடியாது. நாட்டில் என்ன நடந்தாலும் நடந்துட்டுப் போகட்டும்.
திங்கட்கிழமை 10 மணிக்குத்தான் திரும்ப வருவாங்க. ஒரு முதலமைச்சர் அப்படி இருக்க முடியுமா? 24 மணி நேரமும் இருக்கணும். இந்த அரசு வந்த பிறகு பள்ளிக்கூட மாணவர்கள் வரை தங்கு தடையின்றி போதை வஸ்து கிடைக்குது. கோயம்புத்தூரில் மாணவர் ஒருவர் போதை பொருள் விற்பனை குறித்து சொல்லியதற்கு கொலை செய்தார்கள். போலீஸ் என்ன செய்தது அதை? மடைமாற்றம் செய்தார்கள்.
கோஷ்டி சண்டை என கூறினார்கள்.ஒரு அரசு ஒரு தவறு நடந்தால் அதை விசாரித்து, போதை வஸ்து தான் காரணம் என்றால் அதை நிறுத்துவதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில் சொன்னாங்களா? போதை வஸ்துவால் நம்முடைய வருங்கால சந்ததிகள் அழிந்து கொண்டிருக்கிறது.
சமூகம் மோசமாக காரணம் அவர் 34 வருஷம் நடிச்ச படம். சிகரெட் பிடிப்பாரு, தண்ணி அடிப்பாரு, கெட்ட பழக்கம் அவ்வளவும் உண்டு. அதைத்தான் நேத்து எடப்பாடியார் சொன்னாரு. ஒரு நல்ல மனிதன். மனைவி, தாய் தந்தையர், பிள்ளைகளோடு வாழ்கிற ஒருத்தன்தான் நல்ல வாழ்க்கை வாழ்கிறான். அவர் ஒரு முன்னுதாரணமா... எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிச்சாரு. என்னைக்காவது ஒரு நாள்... தண்ணி அடிக்கிற மாதிரியோ, சமுதாயம் கெடுற மாதிரியோ ஒருபோதும் எந்த சீனும் வைக்க மாட்டாரு. இவங்களுக்கு அது இல்லை.
அவங்களைச் சுத்தி இருக்காங்க ஆந்திரா ரெட்டி கேங். விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி, சுனில் ரெட்டி... நாலு பேர்தான் தமிழ்நாடு வித்துட்டு இருக்காங்க. இவங்க நாலு பேரும் என்ன எழுதி கொடுத்தாலும் கையெழுத்து போட்டுடுவாரு. ஏர்போர்ட் விப்பாங்களா யாராவது? நாங்கதான் நடத்துவோம் என சொல்லாமல் ஏர்போர்ட்டை அதானிகிட்ட விலை பேசுகிறார்கள்.
தகவல் உரிமைச் சட்டத்தில் சட்ட ஒழுங்கு பற்றியும் யாருமே கேட்க வேண்டியது இல்லைன்னு சொல்லி, அதிலிருந்து நீக்கி ஒரு அரசாணையும் வெளியிட்டாங்க. நான் எல்லாம் ட்வீட் போட்டேன். 97-இல் கலைஞர் கொண்டு வந்தது அது.தமிழகத்தில் முதன் முதலாக தகவல் உரிமைச் சட்டம் கலைஞர் கொண்டு வந்தாரு. 8 வருஷம் கழித்துதான் மன்மோகன் சிங்... 2005-இல் தான் இந்திய அளவில் வந்தது. அப்போ மக்களுக்கு ஒரு டிரான்ஸ்பரன்சி வேணும், என்ன நடக்குதுன்னு வேணும். இது எதுவுமே இல்லை. இந்த தேர்தல் முடிஞ்ச உடனே... கல், மண், கனிம வளங்கள் எல்லாமே இந்த நாலு பேர் ஆந்திரா ரெட்டி குரூப் கை வசம் சென்று விடும்.அனைத்தும் தனியார் வசம் சென்று விடும்.
தண்ணீர் தனியாருக்கு சேலத்துக்கு கொடுத்தாச்சு.இந்த தேர்தல் முடிஞ்ச உடனே ஸ்மார்ட் மீட்டர் மாட்டி அதானிக்கு ஈபியைக் கொடுத்துருவாங்க. எந்தத் தட்டுப்பாடும் இல்லாத மின் தட்டுப்பாட்டை செயற்கையா உருவாக்கி அதானிகிட்ட கொடுக்கறதுக்காக பண்ணிட்டாங்க.
இந்த நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலை எதுவும் இல்லை. நம்ம போனோம்னா சினிமா ஸ்டார் எல்லாரும் ஓட்டு போடுவாங்க அப்படிங்கிற ஒரு எண்ணத்தோட இருக்காங்க. நினைச்சாங்க.இவர்கள் 2 லட்சம் ஃபேக் ஐடி,50,000 வாட்ஸ்அப் குரூப் வச்சிருக்காங்க. 200 துணை நடிகைகள் இருக்காங்க. அவங்க அழுது பொதுமக்கள் மாதிரி அழுதாங்க. ரீல் தயாரித்து இன்ஸ்டாவில், வாட்ஸ்அப்பில், ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் போட்டுக்கிட்டே இருந்தாங்க. அவர் புனிதர், புத்தர், காந்தின்னு... அதை யாராவது சொல்ல முடியுமா புனிதர், புத்தர்னு?.
அதைத்தான் எடப்பாடியே சொன்னாரு. நல் ஒழுக்கம் வேணும். ஒரு ஆட்சியில் அமர்ந்தவங்க நல் ஒழுக்கத்தோட இருக்கணும்.சட்டமன்றத்தில் வந்து பேசுறாங்களே, என்ன பேசுறாங்கன்னு சொல்லுங்க. சட்டமன்றத்தில் போதை வஸ்து பழக்கம் இருக்கு, அதைத் தடுக்க என்ன பண்ணியிருக்க? அதேபோல... பாலியல் குற்றம் நடக்குது, அதைத் தடுக்க என்ன பண்ற? கொலை கொள்ளை நடக்குது, அதற்கு காவல்துறை எப்படி முடுக்கி விட்டு வேலை பார்க்குதுன்னு சொன்னாரா ஏதாவது ஒரு வார்த்தை? எது வந்தது? சர்க்காரியா கமிஷனும்,மிசாவும் வந்தது. அதுல என்ன யூஸ் இருக்கு சொல்லுங்க? அப்போ சட்டமன்றத்தில் என்ன பேசணுங்கிறது கூட தெரியல?ஆர். எஸ் பாரதி,சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசுவதை பேசுகிறார்.
என் மகன் நல்லா இருந்தவனை... சுத்தி... கொலைகாரன், கொள்ளைக்காரன், குடிகாரப் பயலுக சேர்ந்து என் மகனைக் கெடுத்துட்டான் அப்படின்னு நான் சொல்லலையே, அவங்க அப்பா தானே சொன்னாரு. இதே ஆந்திரா ரெட்டி கேங்கைத் தானே சொன்னாரு. அதை அசெம்பிளியில் பதிவு பண்ணா எப்படி இருக்கும் அவருக்கு? அவருடைய மனைவி என்ன சொன்னாங்க? வேறொரு பொண்ணோட குடும்பமா வாழ்ந்தாருன்னு கோர்ட்டில் போய் சொல்றாங்க. இதெல்லாம் சட்டமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய வார்த்தைகளா?.
மேல்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சர்க்கஸ் கூடாரக் கோமாளிக்கு அரண்மனையைக் கொடுத்தால்... அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கிருவான் அந்த கோமாளி. அந்த கதை தான் தற்போது நடக்குது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!