×
 

IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் (டி20) கிரிக்கெட் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து வாகை சூடியது.

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது இருபது ஓவர் (டி20) போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி பராபதி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய தோல்விகள் குறித்த வரலாற்றை மாற்றியமைத்தது.


கட்டாக்கின் பராபதி ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கு வெற்றி கிடைத்ததில்லை. இங்கு இதற்கு முன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை ஏற்படுத்தி, அந்தச் சாதனையை முறியடித்தது.  

இதையும் படிங்க: "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

முதலில் விளையாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்கத் தவறினர்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன. அதன்பிறகு, களமிறங்கிய துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டமே இந்திய அணியை 175 ரன்களை எட்டச் செய்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா அடித்த 100-வது சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம், அவர் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் (205), சூர்யகுமார் (155), விராட் (124) ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

176 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி, இந்தியப் பந்துவீச்சின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது டி20 வாழ்க்கையில் 100 விக்கெட்டுகளை எட்டி ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.

பும்ராவின் சாதனையைத் தவிர,  இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா, மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணியின் மட்டையாளர்களுக்கு நெருக்கடி அளித்தனர். இந்த வெற்றியின் மூலம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, டி20 தொடரில் வலுவான தொடக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share