×
 

#BREAKING: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி… இந்திய அணி த்ரில் வெற்றி! ஆட்டம் கண்ட பாகிஸ்தான்...!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை 2025 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) – அபுதாபி மற்றும் டுபாயில் – செப்டம்பர் 9 அன்று தொடங்கி, 28 அன்று இறுதியுடன் முடிவடைந்தது. அப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் ஆகிய எட்டு அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் கட்டப் போட்டிகளை விளையாடின. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறின, அங்கிருந்து முதல் இரண்டு அணிகள் இறுதிக்கு தகுதி பெற்றன.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கிய இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதையும் படிங்க: 7 போரை நிறுத்திருக்கேன்! எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்... ஆசையை வெளிப்படுத்திய டிரம்ப்...!

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 146 ரன்கள் பெற்றது. பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி  பாகிஸ்தான் அணியை தோற்கடித்து ஆசிய கோப்பையை தனதாக்கியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 150 ரன்கள் எடுத்து இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: #BREAKING: கரூரில் உண்மையில் நடந்தது என்ன? விசாரணையை தொடங்கிய தனிநபர் ஆணையம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share