இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்... பிசிசிஐ அறிவிப்பு
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வந்தது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அணியை தொடர்ந்து வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடிய நிலையில் சுப்மன் கில்லை நியமித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பும்ரா சிறந்த வீரர் என்றாலும் அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் சுப்மன் கில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: வேறு நாட்டில் ஐபோன் உற்பத்தி.. அமெரிக்காவில் விற்றால் 25% வரி.. அதிபர் டிரம்ப்பின் அடுத்த ஷாக் மூவ்..!
இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியின் கேப்டனாகசுப்மன் கில் செயல்பட உள்ளார்.
இதையும் படிங்க: வாய் விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்.. கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட்.. மீண்டும் சிக்கல்..!