×
 

திமுக வாக்குறுதி நிறைவேற்றலயா… விஜய் போட்ட பழி மக்கள்கிட்ட எடுபடுமா! பந்தாடிய மா.சு.

திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என விஜய் கூறியது எந்த அளவுக்கு மக்களிடம் எடுபடும் என்பது தெரியவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அரசு மனநல மருத்துவமனை சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் உலக தற்கொலை தடுப்பு வாரம் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து அமைச்சர் தலைமையில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உலக தற்கொலை தடுப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்றும் தமிழ்நாடு இந்தியா என்ற எல்லை கடந்து உலகம் முழுவதும் தற்கொலைக்கான காரணம் அதிகரிப்பு, தற்கொலைக்கான மனநிலை அதிகரிப்பது இயல்பான ஒன்றாக உள்ளது எனவும் கூறினார். 

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், 

இதையும் படிங்க: பீர் அடிச்சுட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே! பாராட்டு விழாவில் பங்கம் செய்த ரஜினிகாந்த்…

தமிழ்நாட்டில் 25 இடங்களில் உள்ள போதை தடுப்பு மையங்கள் பெரிய அளவில் பயன் தந்து கொண்டு உள்ளது, அதனால் ஆயிரக்கணக்கான பேர் நல்வாழ்வு பெற்று வருகின்றனர் என்றார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் சொல்வது எந்த அளவிற்கு மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை என்றும் 

மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளை கடந்து திமுக ஆட்சியில் அதிகரித்து உள்ளது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: திருச்சி மக்களோட சத்தம் கேட்குதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீண்டிய விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share