கல்யாணத்திற்கு முதல் நாள் டான்ஸ் மாஸ்டருடன் உல்லாசம்... அடுத்தடுத்து வெளியாகும் ஸ்மிருதி மந்தனா காதலரின் மன்மத லீலைகள்...!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டதில் இருந்தே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நவம்பர் 23ம் தேதி நடைபெறவிருந்தது. தனது நீண்ட நாள் காதலரான பலாஷ் முச்சாலை கரம் பிடிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக, ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தந்தையின் உடல் நிலை தேறிய பிறகே மீண்டும் திருமணம் குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக ஸ்மிருதி மந்தனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு பிபி சற்று உயர்ந்திருப்பதும், கார்டியாக் என்சைம்கள் சற்றே அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பியுள்ளது நிலையில், ஸ்மிருதியின் திருமணம் குறித்து அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற நவி மும்பை மைதானத்தில் பலாஷ் முச்சால் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோவை ஸ்மிருதி சோசியல் மீடியாவில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருமணம் திடீரென ரத்து செய்யப்பட காரணம், ஸ்மிருதி மந்தனா தந்தையின் உடல் நிலை அல்ல, பலாஷ் பற்றி கசிந்து வரும் காதல் லீலைகள் தான் என சோசியல் மீடியாக்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டிய அரக்கன்!! கெத்து காட்டிய பிரம்மோஸ் ஏவுகணைக்கு கூடுது மவுசு!
மேரி டி'கோஸ்டா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்களில், பலாஷ் அவரை மும்பையில் உள்ள வெர்சோவா கடற்கரைக்கு நீச்சலடிக்கவும், ஸ்பாவிற்கு அழைத்துச் சென்றதும், அந்த இளம் பெண் ஸ்மிருதியை உண்மையிலேயே காதலிக்கிறீர்களா? என கேட்டதற்கு, அது லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் (Long Distance Relationship) என்றும், கடந்த 3 மாதங்களாக தனது திரைப்பட வேலைகளில் மும்முரமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
Is it true that Palash Muchhal cheated on Smriti Mandhana?👀
— Mention Cricket (@MentionCricket) November 24, 2025
Rumour: Palash Muchhal allegedly cheated on Smriti Mandhana with a choreographer just the night before their wedding. Earlier reports of his hospitalization were apparently a cover-up, as he reportedly ran away on the… pic.twitter.com/34xFtKLbug
இந்த ஸ்கிரீன் ஷாட்களால் ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ள நிலையில், பலாஷ் பற்றிய இந்த உண்மைகள் தெரிந்ததால் தான் ஸ்மிருதியின் ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்மிருதி மந்தனாவுடன் திருமணம் நடைபெறவிருந்த முதல் நாள் இரவு, பலாஷ் பெண் நடன இயக்குநர் இருவருடன் உல்லாசமாக இருந்ததாகவும், திருமண நாள் அன்று அவர் அங்கே இல்லவே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனை மூடி மறைக்கவே பலாஷுக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் ராஜினாமா... தவெகவில் ஐக்கியம்? பரபரக்கும் அரசியல் களம்...!