இனி மஜா தான்.. மதுரையில் விஜய்.. மாநாட்டு பணிகள் மும்முரம்! தொண்டர்கள் செம குஷி..!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் கட்சியின் தலைவர் விஜய் மதுரைக்கு சென்றடைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் வழி நெடுக கட்சிக்கொடி, பிரம்மாண்ட மேடை எல்இடி திரைகள், பேனர்கள் என சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி மாநாட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், கர்ப்பிணிகள், சிறார்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் மாநாட்டுக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்தே தொலைக்காட்சி வாயிலாக பார்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலம் அதிர மாநாடு நடத்துவோம் என்றும் நாமே முதன்மை சக்தி என்பதை நிரூபிப்போம் எனவும் தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: அதுவும் இதுவும் ஒன்னு இல்ல! தவெக கொடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் மதுரை சென்றடைந்தார். விமானம் மூலம் சென்றால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் சாலை மார்க்கமாக மதுரைக்கு விஜய் சென்றார்.
இதையும் படிங்க: ரெடியா மாமே? தவெக மாநாடு... தெறிக்கவிடும் தொண்டர்கள்..!