டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்... ஜாபர் சாதிக் வீட்டில் 2வது சல்லடை போடும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி...!
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கார் டிரைவர் ஒருவர் அயர்ந்து தூங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கார் டிரைவர் ஒருவர் அயர்ந்து தூங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஒரு சிலர் பண பட்டுவாடா செய்வதாக டெல்லியில் இருந்து ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வருமானவரி மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் சென்னையில் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இணைந்து 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி, அண்ணாசாலையில் இருக்கக்கூடிய ஒரு விடுதி மற்றும் தற்போது எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவருத்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் பறக்கும் படையினரோடு இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்..! சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடியாம்..!
குறிப்பாக பட்டினம்பாக்கத்தில் அமைந்துள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போன்று அவருக்கு சொந்தமான ஜேஎஸ்எம் ரெசிடென்சியின் தலைமை அலுவலகம், எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையான நடைபெற்று வருகிறது. இந்த ஜாபர் சாதிக் என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்.
அதன் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டார். இவர் மீது தற்போது வரை இந்த வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. பணப்பட்டுவாடா செய்வதற்காகவோ அதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது கூட்டு முயற்சியாக நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே, பட்டினம் பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் நடுவே மூன்று அதிகாரிகள் வெளியே வந்து காரில் ஏற முற்பட்டபோது கார் ஓட்டுனர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் பலமுறை எழுப்பியும் அந்த ஓட்டுனர் நீண்ட நேரம் எழுந்திருக்காததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சப்பானிக்கு சீட்டு இல்ல... கமல் ஹாசனை கருணாஸுடன் ஒப்பிட்டு விமர்சித்த விந்தியா...!